தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 'அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீரை கடத்திய கும்பல் சிக்கியது.
'அம்பர்கிரிஸ்' சர்வதேச அளவிலான உயர்ரக வாசனைத் திரவியம் தயாரிக்கும் மூலப்பொருட்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்செந்தூர் பகுதியில் சந்தேகப்படும்படி சென்ற காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தபோது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ்நீரான அம்பர்கிரிஸ் கடத்திச்சென்றது தெரியவந்தது. 2 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 2 கிலோ அம்பர்கிரிஸை பறிமுதல் செய்து ராம்குமார், முகமது அஸ்லம், ஜான் பிரிட்டோ உள்பட 6 பேரை கைது செய்தனர். இவர்கள் தஞ்சாவூரில் இருந்து விற்பனைக்கு கொண்டுவந்ததாக கூறப்படும் நிலையில் அவை குறித்தும் விசாரணை நடத்தினர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்