சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பாட்டாலும், தேர்ச்சி முடிவுகள் எவ்வாறு கணக்கிடப்படும், கல்லூரி சேர்க்கை எவ்வாறு நடத்தப்படும் என்பது குறித்த சந்தேகம் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
நாட்டில் சிபிஎஸ்இ மற்றும் சிஐஎஸ்சிஇ +2 தேர்வுகள் ரத்து செய்யப்படுவது இதுவே முதல்முறை. எனவே, விரைவில் சிபிஎஸ்இ மற்றும் சிஐசிஇ ஆகியவை மாணவர்களின் தேர்ச்சி மதிப்பீட்டிற்கான அளவுகோல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி சமீபத்தில், சி.ஐ.எஸ்.சி.இ மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் 11, 10, மற்றும் 9 ஆம் வகுப்புகளின் செயல்திறன் குறித்த தரவுகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டன. எனவே 12 ஆம் வகுப்பில் உள்ள மாணவர்களின் செயல்திறன் மற்றும் கடந்த மூன்று ஆண்டுகளில் மாணவர்களின் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ச்சி மதிப்பீடு கணக்கிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிபிஎஸ்இ மற்றும் சிஐஎஸ்சிஇ ஆகிய இரண்டும் தங்களது அதிகாரப்பூர்வ அறிக்கைகளில், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மதிப்பீட்டுக்கு ஒத்ததாக இருக்கும் அளவுகோல்களை 12 வகுப்பு தேர்ச்சி மதிப்பீட்டுக்கு அறிவிப்பதாகக் கூறியுள்ளன. இந்த தேர்ச்சி மதிப்பீட்டு முடிவுகளில் அதிருப்தி அடைந்த மாணவர்கள் எழுத்துத் தேர்வுகளை எழுதும் மற்றொரு வாய்ப்பும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த தேர்வுகள் எப்படி நடத்தப்படும், எதுபோன்ற முறைகள் பின்பற்றப்படும் என்ற அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும்.
பள்ளிகளின் போர்டு தேர்வுகளை ரத்து செய்யக் கோரும் வழக்கின் அடுத்த விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும்போது மதிப்பீட்டு அளவுகோல் குறித்த விரிவான அறிவிப்பு ஜூன் 3 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிபிஎஸ்இ எடுக்கும் முடிவுகளின் அடிப்படையிலேயே மாநில வாரிய தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் வாய்ப்பும் உள்ளது. சிபிஎஸ்இ மற்று மாநில வாரிய தேர்வு முடிவுகளுக்குப் பிறகு, ஜே.இ.இ , நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் குறித்த தனது முடிவை விரைவில் அரசாங்கம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்