Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

கொரோனா காலத்தில் அதிகரிக்கும் மருத்துவக் கழிவுகள்: தினசரி 288.7 டன் குவியும் கழிவுகள்

தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளை அகற்ற கூடுதல் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

உலகையே ஆட்டிப்படைத்துவரும் கொரோனா பெருந்தொற்றின் பாதிப்புகளைவிட அந்நோய்க்கு சிகிச்சை பெறுவோர் மூலம் சேரும் மருத்துவக் கழிவுகளால் ஏற்படும் தீங்கு மிக அதிகம். ஏற்கனவே இந்த பூமி, பல்வேறு விதமான கழிவுகளால் மாசுபட்டு வரும் சூழலில், தற்போது பெரும் சவாலாக உருவெடுத்திருப்பது கொரோனா மருத்துவக் கழிவுகள். குறிப்பாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மலைபோல் குவியும் இக்கழிவுகளை சுத்திகரிக்க போதிய வசதிகள் இல்லை. இவ்விரண்டு மாநிலங்களிலும் 12 மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் மட்டுமே உள்ளன. இதன் திறன் 55 புள்ளி 16 டன் ஆகும். ஆனால், வந்து சேரும் மருத்துவக் கழிவுகளோ இதைவிட அதிகம்.

image

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு கொரோனா நோயாளியின் படுக்கையிலிருந்து நாளொன்றுக்கு ஒரு கிலோ வரை கழிவுகள் சேருகின்றன. தமிழ்நாட்டில் இவ்வாறு சேரும் கழிவுகளின் எடை 288.7 டன் ஆகும். இவற்றுடன் சாதாரண நோயாளிகளின் மருத்துவக் கழிவுகளையும் சேர்க்கும்போது 340 டன் அளவுக்கு குவிகின்றது. மலைக்க வைக்கும் அளவுக்கு மலைபோல் குவியும் இந்த மருத்துவக் கழிவுகளை சுத்திகரிக்க வெறும் 55 டன் திறனுள்ள சுத்திகரிப்பு நிலையங்களே உள்ளன.

இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வீ. பிரபாகரன் கூறுகையில், ''மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையம் தேவைப்படுகிறது. மருத்துவக் கழிவுகளை அகற்ற மாற்றுத்திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். கூடுதல் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க வேண்டும்'' என்கிறார் அவர்.

image

மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் தகுந்த இடங்களை தேர்வு செய்து பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களை உருவாக்க வேண்டும். நிலத்திற்கு பாதிப்பு இல்லாத வகையில், ஆழமாக குழி தோண்டி மருத்துவக் கழிவுகளை புதைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். கொரோனா மருத்துவக் கழிவுகள் மாநகராட்சி கழிவுகளுடன் கலப்பதை தடுக்க முறையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளையும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்துகிறது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3cl4hKt

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்