Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

இந்தியா: கடந்த 24 மணிநேரத்தில் 1.32 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதிதாக கொரோனா உறுதியானவர்கள் எண்ணிக்கை 1.32 லட்சம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,85,74,350 என உயர்ந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கையில், நேற்று ஒரு நாளில் 2,07,071 பேர் கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன்மூலம்,  இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையானது 2.65 கோடிக்கும் அதிகமாகி உள்ளது.

image

புதிய தொற்றாளர்களைவிடவும், குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் இந்த வழக்கம், தொடர்ச்சியாக 22 வது நாளாக நடந்து வருகிறது. இதன்மூலம், குணமடைவோர் விகிதமானது 93.08 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. வார அடிப்படையில் இந்த சதவிகிதம் 7.27 என்றுள்ளது.

கொரோனா வைரஸூக்கான பரிசோதனையில், நேற்று ஒருநாளில் 20,75,428 பரிசோதனைகள் செய்யப்பட்டிருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்மூலம், இதுவரை செய்யப்பட்ட கொரோனா பரிசோதனைகள் 35,74,33,846 என்று உயர்ந்துள்ளது. பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்படுவோருக்கான சதவிகிதம், 6.38 என்றாக உள்ளது. 11 வது நாளாக, இந்த எண்ணிக்கை 10 சதவிகிதத்துக்கும் குரைவாக பதிவாகிவருகிறது.

image

தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை எடுப்போர் எண்ணிக்கை 16,35,993 என்று உள்ளது. இந்தியாவில் 8 வது நாளாக தொடர்ச்சியாக 2 லட்சத்துக்கும் குறைவாக கொரோனாவுக்கு சிகிச்சை எடுப்போர் எண்ணிக்கை பதிவுசெய்யப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் - 2,713. இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,40,702 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவை வெல்லும் ஆயுதமாக கருதப்படும் தடுப்பூசியில், முதல் டோஸ் ஊசி செலுத்திக்கொண்டவர்கள் – 178,121,310 பேர். இரண்டாவது டோஸ் செலுத்திக் கொண்டவர்கள், 45,606,322. மொத்தம், 22,37,27,632 பேர் தடுப்பூசி மூலம் பயன்பெற்றுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/2TF5C8u

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்