'கொரோனா 2-வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை; 80 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது' என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் 2 -வது அலை பரவல் சற்று தணியத் தொடங்கியுள்ளது. நாளொன்றுக்கு 4 லட்சத்தை தாண்டி அதிர வைத்த கொரோனா வைரஸ் பாதிப்பு, தற்போது 50 ஆயிரத்திற்கு கீழ் சரிந்துள்ளது. கொரோனா 2-வது அலை பரவல் வேகம் குறைந்துள்ளதால் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. எனினும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடாகா, தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு குறைய மறுத்து வருகிறது.
இந்த சூழலில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) இயக்குநர் டாக்டர் பல்ராம் பார்கவா கூறுகையில், “கொரோனா தொற்றின் 2-வது அலை இன்னும் குறையவில்லை. நாட்டில் உள்ள 80 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு விகிதம் அதிகமாக உள்ளது. இந்த 80 மாவட்டங்கள் மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் அடங்கும். எனவே, தொற்று பரவல் அதிகரிக்கும் வகையிலான தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா ஆகிய கொரோனா வகைகளுக்கு எதிராக தடுப்பூசிகள் திறம்பட செயலாற்றுகின்றன” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்