உத்தரப்பிரதேசத்தில் சிறிய ரக சரக்கு வாகனத்தில் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
கான்பூர் அருகே சச்சேந்தி என்ற இடத்தில் மூன்று சக்கர சிறிய ரக சரக்கு வாகனத்தில், அகமதாபாத் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு சொகுசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் சரக்கு வாகனம் தூக்கி வீசப்பட்ட நிலையில், பேருந்து நெடுஞ்சாலையில் உருண்டது. விபத்தில் பேருந்து பயணிகள் உள்ளிட்ட 17 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமுற்றனர். மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். காயமுற்றோருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமென்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்