கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய வரும் 12-ஆம் தேதி திருவாரூர் செல்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றது முதல் சேலம், கோயமுத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பு ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறார் மு.க.ஸ்டாலின். செங்கல்பட்டிலுள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை ஆய்வு செய்த அவர், அத்தடுப்பூசி மையத்தின் செயல்பாட்டை தொடங்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதினார். மேலும் காணொலி காட்சி வாயிலாகவும் மாவட்ட ஆட்சியர்களுடன் அவ்வப்போது கொரோனா தடுப்புப்பணிகள் பற்றி ஆலோசனை நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு வண்டலூர் மிருகக்காட்சி சாலையில் சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்ததையடுத்து அவர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்துக்கும் மேலாக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக படிப்படியாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை குறைந்தாலும் திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது. இதன்காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை. இந்த சூழலில் திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் ஆய்வு நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3pur2kmகொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய வரும் 12-ஆம் தேதி திருவாரூர் செல்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றது முதல் சேலம், கோயமுத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பு ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறார் மு.க.ஸ்டாலின். செங்கல்பட்டிலுள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை ஆய்வு செய்த அவர், அத்தடுப்பூசி மையத்தின் செயல்பாட்டை தொடங்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதினார். மேலும் காணொலி காட்சி வாயிலாகவும் மாவட்ட ஆட்சியர்களுடன் அவ்வப்போது கொரோனா தடுப்புப்பணிகள் பற்றி ஆலோசனை நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு வண்டலூர் மிருகக்காட்சி சாலையில் சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்ததையடுத்து அவர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்துக்கும் மேலாக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக படிப்படியாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை குறைந்தாலும் திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது. இதன்காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை. இந்த சூழலில் திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் ஆய்வு நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்