இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் சென்னையில் தடகள பயிற்சியாளர் நாகராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக பாலியல் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து நாகராஜன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைத்தொடர்ந்து அவரை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்த பின் காவல் துறையினர் கைது செய்தனர். சென்னையில் தடகள பயிற்சி மையம் நடத்தி வரும் பயிற்சியாளர் நாகராஜன் மீது இளம்பெண் பாலியல் புகார் அளித்திருந்தார்.
கடந்த 2013ஆம் ஆண்டு நாகராஜனிடம் தடகள பயிற்சிகாக சென்றபோது, பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் அந்த பெண் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் நாகராஜன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த சென்னை பூக்கடை அனைத்து மகளிர் காவல்துறையினர், விசாரணை நடத்தி கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நாகாராஜனை மீண்டும் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3p11vz4

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்