ஒடிசா அருகே வங்கக்கடலில் கரையை கடக்க தொடங்கியது அதி தீவிர புயலான யாஸ்.
யாஸ் புயல் கரையை கடந்து வருவதால் ஒடிசாவில் கனமழை பெய்து வருகிறது. புயல் சேதத்தை கட்டுப்படுத்த ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசால் செய்யப்பட்டிருக்கிறது.

யாஸ் புயலால் ஒடிசா மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் பலத்த காற்றும், கனமழையும் இருக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
புயலையொட்டி ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இரு மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. காற்றில் ரயில்கள் நகர்ந்து செல்லாமல் இருக்க சக்கரங்கள் சங்கிலியால் தண்டவாளத்தில் பிணைக்கப்பட்டுள்ளன. புயல் கரையை கடக்கும் ஒடிஷா மாநிலத்தின் பாரதிப் பகுதியில் அலைகளின் சீற்றம் மிகுந்து காணப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3oQaLWI

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்