இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், இங்கிருந்து அமெரிக்கா செல்வதற்கு அந்நாடு தடை விதித்துள்ளது.
வரும் 4ஆம் தேதி முதல் இந்த கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. எனினும் அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா 2ஆம் அலை தீவிரமடைந்துவரும் நிலையில், இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புமாறு அண்மையில் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்திருந்தது.
இந்த நிலையில், வரும் 4ஆம் தேதி முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது. இதனிடையே, கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள 100 மில்லியன் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்