Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ஸ்ரீபெரும்புதூர்: ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தங்கு தடையின்றி ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வகையில், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் நாள் ஒன்றுக்கு 165 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரி மாநிலத்திற்கும் தொடர்ந்து ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.

இந்நிலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவல் ஆய்வாளர் தலைமையில் உதவி ஆய்வாளர் மற்றும் 4 காவல்துறையினர் கொண்ட குழு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பிரத்யேகமாக ஐந்து ரோந்து வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன. இங்கிருந்து நாளொன்றுக்கு 33 முறை ஆக்சிஜனை ஏற்றிக்கொண்டு லாரிகள் சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் செல்கின்றன. ஆக்சிஜன் கொண்டு செல்வதில் தடை ஏற்படாமல் இருக்க அந்தந்த மாவட்ட எல்லை வரை ஆக்சிஜன் லாரி முன்பாக ரோந்து வாகனம் செல்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3bd8LlO

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்