”அமையவிருக்கும் புதிய அரசு கொரோனா சிகிச்சைக் கட்டணங்களை நெறிப்படுத்த வேண்டும்” என்று புதிய முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.
அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கொரோனா கொள்ளை நோய் பரவும் பேரிடர் கால நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு சில தனியார் மருத்துவமனைகள் ஈவிரக்கமின்றி நடந்து வருகின்றன. எரிகின்ற வீட்டில் பிடுங்கியவரை லாபம் என மருத்துவக் கட்டணங்களைப் பல மடங்கு உயர்த்தியுள்ளனர். லட்சக்கணக்கான ரூபாய் முன்பணமாக செலுத்தினால்தான் அனுமதி. அப்படி செலுத்தும் பணத்தில் பாதியை கணக்கில் வராத கருப்புப் பணமாகத் தரவேண்டும். ரசீது கிடையாது. எப்போது கிளம்பச்சொன்னாலும் டிஸ்சார்ஜ் இல்லாமேயே கிளம்பிவிட வேண்டும் என்று அடாவடி செய்கிறார்கள்.
அமையவிருக்கும் புதிய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு கொரோனா சிகிச்சைக்கான கட்டணங்களை நெறிப்படுத்த வேண்டும். அதிகபட்ச விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும். கொள்ளை நோய் காலத்தில் எல்லாவிதமான மருத்துவ நடைமுறைகளும் சேவைகளும் தரப்பட்டு ஒரே மாதிரியான கட்டணமே தமிழகம் முழுக்க உள்ள அனைத்து தனியார் மத்துவமனைகளிலும் நிர்ணயிக்கப்படவேண்டும். தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க ஸ்டாலின் இதை உடனடியாக பரிசீலிக்க கேட்டுக்கொள்கிறேன்” என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்