இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு பார்வையாளர்களுக்கு அனுமதி இன்றி பூட்டிய ஐந்து மைதானங்களுக்குள் பயோ செக்யூர் பபுளில் இருந்தபடி நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடினார்கள் கிரிக்கெட் வீரர்கள். இருப்பினும் கொரோனா தொற்று, தொடரில் பங்கேற்று விளையாடிய வீரர்களை அண்டிய காரணத்தினால் தொடரை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது ஐபிஎல் நிர்வாக குழு. இந்நிலையில் தொடரில் பங்கேற்று விளையாடிய வெளிநாட்டு வீரர்கள் எப்படி தங்களது தாயகம் திரும்புவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவில் நோய் தொற்று பாதிப்பு அதிகளவில் உள்ளதால் நோய் தொற்று பரவல் அபாயத்தை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலியா உட்பட சில சர்வதேச நாடுகள் இந்தியாவிலிருந்து வான்வழி போக்குவாரத்திற்கு அனுமதி மறுந்துள்ளன. அது தான் தற்போது வீரர்கள் அவர்களது தாயகம் திரும்புவாதில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
ஐபிஎல் நிர்வாகம் சொல்வது என்ன?
“இந்திய கிரிக்கெட் வாரியம் பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் வாரியத்துடன் வீரர்களை பத்திரமாக அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்புவது குறித்து பேசி வருகிறது. எவ்வளவு விரைவாக முடியுமோ அந்தளவுக்கு இதில் நடவடிக்க எடுக்கப்படும். அதற்கான வழிகளை ஏற்படுத்த முயன்று வருகிறோம்” என தெரிவித்துள்ளார் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல்.
மொத்தம் எத்தனை வீரர்கள்?
நடப்பு ஐபிஎல் தொடரை பொறுத்துவரையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 14 வீரர்கள், இங்கிலாந்தை சேர்ந்த 11 வீரர்கள், நியூசிலாந்தை சேர்ந்த 10 வீரர்கள், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 11 வீரர்கள், வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த 9 வீரர்கள், ஆப்கானிஸ்தானை சேர்ந்த 3 வீரர்கள் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த 2 வீரர்கள் என மொத்தம் 60 வீரர்கள் தொடர் ஒத்திவைக்கப்படும் வரை பயோ பபுளில் தங்கள் அணியினருடன் தங்கி இருந்தனர்.
சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள்
இந்தியாவில் இருந்து விமான போக்குவரத்துக்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் உள்ள ஆஸ்திரேலிய குடிமகனாக இருந்தாலும் மே 15 வரை காத்திருக்க வேண்டும் என சொல்லியுள்ளது அந்த அரசு. அதனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடிய வீரர்கள், வர்ணனையாளர்கள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் என பலர் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் இந்திய கிரிக்கெட் வாரியம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்துடன் பேசி வருகிறது. மேலும் இந்தியாவில் உள்ள ஆஸ்திரேலிய மாலத்தீவு அல்லது இலங்கைக்கு சென்று. அங்கு அவர்களை தனிமைப்படுத்தி அதன் பிறகு அவர்களை ஆஸ்திரேலியா அனுப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் இந்த முயற்சி எந்த அளவிற்கு கைகொடுக்கும் என பொருத்திருந்து பார்க்க வேண்டி உள்ளது.
மற்ற நாட்டு வீரர்களின் பயணம் எப்படி?
ஒவ்வொரு வீரரும் தங்கள் தாய் நாட்டிற்கு திரும்புவதற்கு முன்னதாக பபுளில் இருந்து வெளியேற தொற்று பாதிப்பு இல்லை என்பதற்கு சான்றாக குறைந்தது மூன்று முறை பரிசோதனை மேற்கொள்ள வேண்டி உள்ளது.
தென்னாப்பிரிக்காவை பொறுத்தவரை வீரர்கள் தங்களது பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கபட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் இருந்தால் தாராளமாக பயணிக்கலாம் என பச்சை கொடி காட்டப்பட்டுள்ளது. மறுபக்கம் இங்கிலாந்தை பொறுத்தவரை பத்து நாட்கள் கட்டாயமாக நாட்டுக்குள் வரும் பயணிகள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து வரும் தங்கள் நாட்டு பிரஜைகளுக்கு இங்கிலாந்து அனுமதை கொடுக்கிறது.
நியூசிலாந்தை பொறுத்தவரை சில நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. அதனால் இந்தியாவில் இருந்து நியூசிலாந்து செல்லும் வீரர்கள் இந்த கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டியுள்ளது. இருந்தாலும் இந்தியாவுடனான போக்குவரத்துக்கு நியூசிலாந்து தடை விதித்துள்ளதாக தெரிகிறது. அதே போல வங்கதேசம் சரக்கு போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி கொடுத்துள்ளது. அதனால் சில நாடுகளை சேர்ந்த வீரர்கள் இந்தியாவிலிருந்து மாற்று பிளைட் பிடித்து வேறு நாட்டுக்கு சென்று அங்கிருந்து தங்கள் நாட்டிற்கு செல்ல வேண்டி உள்ளது.
நடப்பு சீசன் நடைபெற வாய்ப்பு உள்ளதா?
ஐபிஎல் 2021 சீசனில் மேலும் 31 போட்டிகள் நடத்த வேண்டியுள்ளது. அதனை நவம்பர் மாத வாக்கில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறதாம். இருப்பினும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அட்டவணையை பொருத்து அதில் மாற்றங்கள் ஏற்படலாம் என தெரிகிறது.
இந்திய வீரர்களின் நிலை என்ன?
வரும் ஜூன் 18 தொடங்கி 22 வரையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாட உள்ளன. இந்த போட்டி இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து விளையாட உள்ளது. இந்த தொடர் இங்கிலாந்தில் நடைபெறுவதால் நியூசிலாந்து வீரர்கள் முன்கூட்டியே இங்கிலாந்து சென்று விடுவார்கள். ஆனால் இங்கிலாந்து இப்போது இந்தியா மீது விதித்துள்ள தடையை நீட்டித்தால் இந்திய வீரர்கள் இங்கிலாந்து செல்வதில் சிக்கல் ஏற்படும். இறுதி போட்டியை திட்டமிட்டபடி குறித்த தேதியில் நடத்தப்படும் என அண்மையில் கூட ஐசிசி தெரிவித்திருந்தது. ஆக மொத்தம் இப்போதைக்கு இந்திய கிரிக்கெட் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உள்ளது.
-எல்லுச்சாமி கார்த்திக்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்