Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

சி.டி.ஸ்கேன் பரிசோதனையை எப்போது செய்யலாம்? - மருத்துவரின் அறிவுரைகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மிகப்பெரும் பிரச்னையாக இருக்கும் நுரையீரல் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது, சி.டி.ஸ்கேன் எப்போது செய்ய வேண்டும் என்பது பற்றி டெல்லியை சேர்ந்த மருத்துவரொருவர் விளக்கமாக கூறியிருக்கிறார்.

"உலகமே கொரோனாவில் போராடிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் இந்த இரண்டாவது அலை, மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது" எனக் குறிப்பிட்டிருக்கும் மருத்துவர் பாபி பல்கோத்ரா, கொரோனா தன்னுடைய தாக்கத்தை தொண்டையிலிருந்து தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை முழுமையாக அழித்துக் கொண்டிருக்கிறது என கூறியுள்ளார்.

நோய் எதிர்ப்பு திறன் பாதிக்கப்பட பாதிக்கப்பட, நுரையீரல் மிக மோசமாக பாதிக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

image

சி.டி.ஸ்கேன் குறித்து விரிவாக பேசும்போது,

"கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டு, 5 முதல் 6 நாள்களுக்குப் பிறகு, நுரையீரல் தன்னுடைய பாதிப்பை தொடங்குகிறது. இவை ஏற்படும்போது, மூச்சு விடுவதில் சிரமம் - இருமல் - இருமலின் போது ரத்தம் வருதல் போன்றவை அறிகுறிகளாக ஏற்படும்.

நுரையீரல் பாதிப்பை பொறுத்தவரை, தடுப்பூசி போட்டிருப்பவர்களுக்கும், இயற்கையாக நோய் எதிர்ப்பு திறன் சிறப்பாக செயல்படுபவர்களுக்கும் நோயின் தாக்கம் மோசமாக இருக்காது. அவர்களின் அந்த நோய் எதிர்ப்பு திறன், நுரையீரலை முழுமையாக காக்கும்.

பொதுவாக நுரையீரல் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய, சி.டி.ஸ்கேன் மருத்துவர்களால் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படும். சி.டி. ஸ்கேன் ரிப்போர்டில், CO-RADS Scoring என்றொரு பகுதி இருக்கும். இந்த ஸ்கோரிங்,

* CO-RADS 1 என்று இருந்தால், அவருக்கு கொரோனாவின் தாக்கம் உடலில் இல்லை என்று அர்த்தம்.
* இதுவே, CO-RADS 2 என்று இருந்தால், கோவிட் 19 இல்லாமல், வேறு ஏதேனும் சாதாரண வைரஸ் உடலில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று அர்த்தம்.
* CO-RADS 3 என்றிருந்தால், கோவிட் 19 கொரோனா உடலில் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று பொருள்
* CO-RADS 4 என்றிருந்தால், கொரோனாவுக்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம் என பொருள்.
* CO-RADS 5 என்றிருந்தால், நிச்சயம் கோவிட் 19 கொரோனா இருக்கிறது என்று சொல்லப்படும்.

எப்போது செய்யலாம் சி.டி.ஸ்கேன்?

சி.டி. ஸ்கேன்னை பொறுத்தவரை, பொதுமக்கள் சுயமாக சென்று ஸ்கேன் செய்துக் கொள்ளக்கூடாது. மருத்துவரிடம் ஆலோசித்து, எத்தனை நாள்களுக்குப் பிறகு ஸ்கேன் எடுக்க வேண்டும் என்பதை கேட்டு, அவர் சொல்லும் நாளில்தான் ஸ்கேன் செய்ய வேண்டும். பெரும்பாலும் 5 முதல் 7 நாள்கள் தொடர்ந்து அறிகுறிகள் தெரியவந்தால் மட்டுமே ஸ்கேன் செய்ய மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

சிலர் ஆர்.டி.பி.சி.ர். எனப்படும் கொரோனாவுக்கான பரிசோதனைக்கு பதிலாக, சி.டி.ஸ்கேன் எடுப்பதை காணமுடிகிறது. சி.டி.ஸ்கேன், கொரோனா தொற்று இருப்பதை தோராயமாகத்தான் சொல்லுமே தவிர, உறுதிப்படுத்தாது. மூச்சுத்திணறல், நெஞ்சுப்பிடிப்பு, இருமல், உடலில் ஆக்சிஜன் அளவு குறைவு போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள், நிச்சயம் மருத்துவர்களிடம் ஆலோசித்துவிட்டுதான் சி.டி.ஸ்கேன் செய்ய வேண்டும்" என கூறியுள்ளார் மருத்துவர் பாபி பல்கோத்ரா.

தகவல் உறுதுணை : India Today

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3h8qyOH

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்