தமிழகத்தில் திமுக தலைமையில் புதிய ஆட்சி அமைந்துள்ளது. புதிய அமைச்சரவையில் இடம்பெறுவோர் பட்டியல் நேற்று மாலையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அமைச்சரவைப் பட்டியலில் 25 மாவட்டங்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. சேலம், தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, அரியலூர் ஆகிய 13 மாவட்டங்களுக்குப் பிரதிநிதித்துவமே இல்லை.
இதுகுறித்து பத்திரிகையாளர் குபேந்திரன் கூறுகையில், ''மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையில் வரவேற்கப்பட வேண்டிய அம்சங்கள் நிறையவே இருக்கின்றன. குறைகள் குறைவாகவே உள்ளன. கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடிமிக்க இந்த காலக்கட்டத்தில், சுகாதாரத்துறை அமைச்சராக மா.சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டது அருமையான தேர்வு. அவருடைய உழைப்பு பற்றி சென்னை மக்களுக்கு நன்றாகவே தெரியும். அதேபோல் தொழில் துறை அமைச்சராக தங்கம் தென்னரசு, நிதித்துறை அமைச்சராக பழனிவேல் தியாகராஜன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிடோர் நியமனம் மிகச்சரியான தேர்வு.
சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ள சிலரது ஆதங்கங்களை பார்த்தபோது, திமுகவுக்கு நல்ல வெற்றியைக் கொடுத்த டெல்டா மாவட்டங்கள் என்று சொல்லப்படக்கூடிய தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் அமைச்சரவை பிரதிநிதித்துவமே இல்லை. ஆனால் திமுகவை சொல்லி தோற்கடித்த கொங்கு மண்டலத்தில் 6 அமைச்சர்கள் தேவையா என்ற கருத்து பரவலாக நிலவுகிறது'' என்றார்.
பத்திரிகையாளர் ரமேஷ் கூறுகையில், ''திமுக ஆட்சி அமையும் போதெல்லாம் காலங்காலமாக சிலருக்கு அமைச்சரவையில் தவறாமல் இடம் ஒதுக்கப்படும். அப்படியொரு எண்ணத்தை மாற்றுவதற்காக என்னவோ, மூத்த நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அல்லாத துறை ஒதுக்கப்பட்டுள்ளது. வெளியில் இருந்து வந்தவர்களுக்கு, அதாவது சமீபத்தில் கட்சியில் இணைந்தவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறை வழங்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் அனுபமிக்க, தகுதியான, திறமையான ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் யாரும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. இளைஞர்களுக்கு வாய்ப்பு என்ற வகையில் டி.ஆர்.பி. ராஜாவுக்கு அமைச்சரவை ஒதுக்கப்படவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாக்கோட்டை க.அன்பழகன், எஸ்.கலைவாணன் ஆகியோரது பெயர்கள் இடம் பெறாதது ஏமாற்றமே'' எனத் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்