மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை பேரிடர் கால நெறிமுறைகளை கடைப்பிடித்து அமைதியாக எளிமையாக கொண்டாடுமாறு அக்கட்சியினரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
வரும் ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவினர் அவரவர் இல்லங்களில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
ஊரடங்கு என்பதால் பொதுவெளியில் கருணாநிதியின் பிறந்தநாள் நிகழ்வுகள் எதுவும் நடத்திட வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மக்களின் உயிரை காப்பது ஒன்றே நம் முன் உள்ள தலையாய பணி என ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். ஊரடங்கில் உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை எதிர்பார்த்திருக்கும் ஏழை-எளிய மக்களுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று உதவிகளை வழங்கிடுமாறும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
உதவிகளை செய்வதற்கு ஏற்ப அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று முகக் கவசம், தனி மனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா பேரிடர் நெறிமுறைகளை கடைப்பிடித்து கூட்டம் சேராதவாறு கவனமாக செயலாற்றுமாறும் திமுகவினரை முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/34s2leVமறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை பேரிடர் கால நெறிமுறைகளை கடைப்பிடித்து அமைதியாக எளிமையாக கொண்டாடுமாறு அக்கட்சியினரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
வரும் ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவினர் அவரவர் இல்லங்களில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
ஊரடங்கு என்பதால் பொதுவெளியில் கருணாநிதியின் பிறந்தநாள் நிகழ்வுகள் எதுவும் நடத்திட வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மக்களின் உயிரை காப்பது ஒன்றே நம் முன் உள்ள தலையாய பணி என ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். ஊரடங்கில் உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை எதிர்பார்த்திருக்கும் ஏழை-எளிய மக்களுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று உதவிகளை வழங்கிடுமாறும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
உதவிகளை செய்வதற்கு ஏற்ப அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று முகக் கவசம், தனி மனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா பேரிடர் நெறிமுறைகளை கடைப்பிடித்து கூட்டம் சேராதவாறு கவனமாக செயலாற்றுமாறும் திமுகவினரை முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்