கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய நியூசிலாந்து வீரர் டிம் சீஃபர்டுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அவர் மற்ற வீரர்களுடன் நாடு திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கலந்துகொண்ட வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் நடப்பு ஐபிஎல் தொடரை பிசிசிஐ ரத்து செய்தது. இதனையடுத்து இதில் கலந்து கொண்டிருந்த வெளிநாட்டு வீரர்கள், வர்னணையாளர், அம்பயர்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய நியூசிலாந்து வீரர் டிம் சீஃபர்டுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து டிம் சீஃபர்ட் மற்ற வீரர்களுடன் தனது நாட்டுக்கு திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மிதமான அறிகுறிகளைக் கொண்டிருக்கும் டிம் சீஃபர்ட் தற்போது சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அங்கு ஏற்கனவே கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி அனுமதிக்கப்பட்டுள்ள அதே தனியார் மருத்துவமனையில் டிம் சீஃபர்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பரிசோதனையில் 'நெகட்டிவ்' முடிவு வந்தபின்னரே, டிம் சீஃபர்ட் நாடு திரும்புவதற்கான ஏற்பாடு செய்யப்படும் எனவும் அதுவரைக்கும் அவருக்குத் தேவையான சிகிச்சை ஏற்பாடு உள்ளிட்ட அனைத்தையும் தாங்களே கவனித்துக் கொள்வதாக பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற நியூசிலாந்து வீரர்கள் இந்தியாவிலிருந்து நேராக இங்கிலாந்துக்குச் செல்கிறார்கள். இங்கிலாந்துக்கு எதிராக இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது நியூசிலாந்து அணி. இதனால் ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற கேன் வில்லியம்சன், கைல் ஜேமிசன், சான்ட்னர் ஆகிய நியூசிலாந்து டெஸ்ட் அணி வீரர்கள் இந்தியாவிலிருந்து வரும் 11-ம் தேதி இங்கிலாந்துக்குச் செல்லவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா வீரர்கள் இந்தியாவில் இருந்து நேரடியாக சொந்த நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், மாலத்தீவு சென்று, அங்கு சில நாட்கள் தனிமையில் இருந்து கொண்டு, அதன்பின் அங்கிருந்து ஆஸ்திரேலியா புறப்பட இருக்கிறார்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்