20 ஓவர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும், திறமையும் அனுபவமும் இருந்தும் சில வீரர்களுக்கு களமிறங்க இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை. ராசியில்லா இந்த ராஜாக்கள் யார். பார்க்கலாம்.
35 வயது அனுபவ வீரர் ராபின் உத்தப்பாவால் மிட் சீசன் ட்ரான்ஸ்ஃபர் எனும் அம்சம் இப்போது பேசுபொருளாகியிருக்கிறது. இவர்14 சீசன்களில் 6 ஆவது அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். 2008-ஆம் ஆண்டு மும்பை இண்டியன்ஸ் அணியில் தொடங்கியது உத்தப்பாவின் ஐபில் பயணம். இதன்பின்னர் பெங்களூரு ராயல் சேலஞ்ர்ஸ், இடையில் வந்து போன புனே வாரியர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் என ஐந்து அணிகளுக்காக விளையாடியுள்ள உத்தப்பாவை இந்த சீசன் சென்னை அணி தங்கள் வசப்படுத்தியது. அவரும் ட்விட்டரில் யல்லோ வணக்கம் என பதிவிட்டு எதிர்பார்ப்புடன் இருந்தார்.
முந்தைய சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி 196 ரன்கள் மட்டுமே எடுத்தார் அவர். எனினும் நடப்பு சீசனுக்கு முன்பாக நடைபெற்ற உள்நாட்டு டி 20 தொடரான சையத் முஸ்தாக் கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியிருந்தார் உத்தப்பா. கேரள அணிக்காக விளையாடிய அவர் 5 போட்டிகளில் 161 ரன்களை குவித்திருந்தார். இதில் குறிப்பாக டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 54 பந்துகளில் 91 ரன்களை குவித்திருந்தார் அவர். கேரள அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் தான் இப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன்.
சென்னை அணியில் தொடக்க வீரர்களாக டூ பிளஸ்ஸியும், ரூத்துராஜ் கெய்க்வாடும் ஜொலித்து வரும் நிலையிலும், மத்திய வரிசையில் செட்டாகி விட்ட சில வீரர்கள் இருப்பதாலும் களமிறங்கும் லெவனில் உத்தாப்பாவுக்கு வாய்ப்பு என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உத்தப்பாவை மிட் சீசன் ட்ரான்ஸ்பர் முறையில் தங்கள் அணிக்குள் கொண்டு வரும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.
சென்னை அணியில் உத்தப்பாவுக்கு வாய்ப்பு கிடைக்காதது போலவே பஞ்சாப் அணியில் இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் மலனுக்கு வாய்ப்பளிப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. சர்வதேச இருபது ஓவர் போட்டிகளுக்கான தரநிலையில் முதலிடத்தில் இருக்கும் நிலையிலும் அவருக்கு வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் தொடர்கிறது. அந்த அணியைச் சேர்ந்த மன்தீப் சிங்கிற்கும் ஏறக்குறைய இதேநிலை தான்.
கடந்த சீசனில் சென்னை அணியில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்தை சேர்ந்த சாம் பில்லிங்ஸ் இந்த முறை டெல்லி அணியில் உள்ளார். டெல்லி அணியின் வீரர்களின் கலவை சரியாக உள்ள நிலையில் பில்லிங்ஸ்-கு வாய்ப்பு என்பது கேள்விக்குறியே.
சென்னை அணியில் உள்ள நியுசிலாந்தை சேர்ந்த ஆல்ரவுண்டர் மிச்செல் சாண்ட்னரின் நிலைமையும் இதேதான். அவ்வவ்போது ஃபீல்டிங் செய்யச் சென்று தம்மை ஆறுதல்படுத்திக் கொண்டிருக்கிறார் அவர். லாக்கி ஃபெர்கியுசன், பென் கட்டிங் என பல வீரர்கள் வாய்ப்புக்காக ஐபிஎல்லியில் காத்திருக்கிறார்கள். மிட் சீசன் ட்ரான்ஸ்ஃபர் மூலம் இவர்களுக்கு விடிவு கிடைக்கலாம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்