நாட்டில் 9,02,291 கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் , 1,70,841 பேருக்கு வென்டிலேட்டர்கள் தேவைப்படுகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் தற்போதைய நிலைமை குறித்து விவாதித்த அமைச்சர்கள் குழுவின், 25 வது கூட்டத்தில் உரையாற்றிய மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், நாட்டில் 1.34 சதவீத கொரோனா நோயாளிகள் ஐ.சி.யுவிலும், 0.39 சதவீத நோயாளிகள் வென்டிலேட்டர்களிலும், 3.70 சதவீத நோயாளிகள் ஆக்ஸிஜன் வழங்கப்பட்ட நிலையிலும் உள்ளனர் என தெரிவித்தார்.
இதன்படி நாட்டில் மொத்தமாக சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளில், ஐ.சி.யூவில் 4,88,861 நோயாளிகளும், வென்டிலேட்டரில் 1,70,841 நோயாளிகளும், ஆக்ஸிஜன் வழங்கப்பட்ட நிலையில் 9,02,291 நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் கடுமையான பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. இந்த சூழலில் பல மாநிலங்கள் மருத்துவ ஆக்ஸிஜன், படுக்கைகள் மற்றும் முக்கியமான மருந்துகளின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2SDLCTdநாட்டில் 9,02,291 கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் , 1,70,841 பேருக்கு வென்டிலேட்டர்கள் தேவைப்படுகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் தற்போதைய நிலைமை குறித்து விவாதித்த அமைச்சர்கள் குழுவின், 25 வது கூட்டத்தில் உரையாற்றிய மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், நாட்டில் 1.34 சதவீத கொரோனா நோயாளிகள் ஐ.சி.யுவிலும், 0.39 சதவீத நோயாளிகள் வென்டிலேட்டர்களிலும், 3.70 சதவீத நோயாளிகள் ஆக்ஸிஜன் வழங்கப்பட்ட நிலையிலும் உள்ளனர் என தெரிவித்தார்.
இதன்படி நாட்டில் மொத்தமாக சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளில், ஐ.சி.யூவில் 4,88,861 நோயாளிகளும், வென்டிலேட்டரில் 1,70,841 நோயாளிகளும், ஆக்ஸிஜன் வழங்கப்பட்ட நிலையில் 9,02,291 நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் கடுமையான பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. இந்த சூழலில் பல மாநிலங்கள் மருத்துவ ஆக்ஸிஜன், படுக்கைகள் மற்றும் முக்கியமான மருந்துகளின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்