3வது முறையாக மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஜகதீப் தங்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கொரோனா நோய் பரவல் காரணமாக கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெற்றது. இதனால் பிற மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பதவியேற்பு விழாவுக்கான அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை.
மேற்குவங்க மூத்தத் தலைவரான புத்ததேவ் பட்டசார்ஜி, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்துல் மன்னன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பீமன் போஸ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி, தேர்தல் வியூகவியலாளர் பிரசாந்த் கிஷோர், கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி ஆகியோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்