Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

கொரோனா 3-வது அலை குழந்தைகளை அதிகமாக பாதிக்க வாய்ப்பு? முன்னெச்சரிக்கையாக என்ன செய்யலாம்?

https://ift.tt/3f3W3XD

மூன்றாவது கொரோனா அலை தாக்குதலில் குழந்தைகள் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாகக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளதால், இதனை தவிர்க்க செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

குழந்தைகளை பாதுகாக்க முக்கிய ஆயுதமாக உள்ள தடுப்பூசி கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் உருமாறியபடி அனைத்து தரப்பு மக்களையும் பாதிப்பிற்குள்ளாக்கி வருகிறது. குழந்தைகளும் தொற்றுக்கு ஆளாகி வருவது தான் தற்போதைய பெரும் கவலையாக இருந்து வருகிறது. முதல் கொரோனா அலையின் போது, நோய் அறிகுறிகள் இல்லாமல் குழந்தைகள் தொற்றுக்கு ஆளாகி வந்த நிலையில், இரண்டாவது அலை தாக்குதலில் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு காய்ச்சல், மூக்கடைப்பு, வயிற்றுப்போக்கு, தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், மூன்றாவது கொரோனா அலை, குழந்தைகளை அதிகம் தாக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதால், அதனை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் தற்போதே தயாராக வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

image

மூன்றாவது கொரோனா அலையில் குழந்தைகள் அதிகம் பாதிப்பிற்கு ஆளாவார்கள் என்பதற்கு சான்றாக தற்போது அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் மூன்றாவது கொரோனா அலை தற்போது பரவி வரும் சூழலில், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்தவர்களில் 3 விழுக்காட்டினர் குழந்தைகளாக இருந்த சூழலில், தற்போது மூன்றாவது அலையில், 22 விழுக்காடாக குழந்தைகள் பாதிப்பு அதிகரித்துள்ளது தான் அதற்கு சான்று.

இதற்கு முக்கியக் காரணம், பெரியவர்கள் பெரும்பாலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாததால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் குழந்தைகளும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்றும், அப்போதே கொரோனா பாதிப்பில் இருந்து அவர்கள் பாதுகாக்கப்படுவர் என்கின்றனர் மருத்துவர்கள். குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாததால், அவர்கள் மூலமாக தொற்று வேகமாக பரவி வருவதாக ஆராய்ச்சி ஒன்றில் தெரிய வந்துள்ளது. பெரியவர்களை விட குழந்தைகள் வழி அதிகளவில் தொற்று பரவுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகள் கொரோனாவிலிருந்து பாதிக்கப்படுவதை தவிர்க்க, உலகிலேயே முதல் முதலாக கனடாவில் 12முதல் 15வயதுடைய குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பூசியை போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்துபடியாக அமெரிக்காவும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளது. குழந்தைகளுக்கு எத்தனை டோஸ் தடுப்பூசி வரை போடலாம் என்ற ஆராய்ச்சியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவை பொருத்தவரை தற்போது வரை 18வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட அனுமதிக்கப்பட்டுள்ளது.

வைரஸில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும், குழந்தைகள் மூலம் வைரஸ் பரவுவதைத் தவிர்க்கவும் தற்போதைய சூழலில் தடுப்பூசி முக்கிய ஆயுதமாக உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்