தமிழகத்தில் ஒரேநாளில் 20,952 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
1,41,021 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் 20,935, வெளிமாநிலங்களில் இருந்துவந்த 17 பேர் என 20,952 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 6,078 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 6,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 12 வயதிற்குட்பட்ட 748 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனாவால் மேலும் 122 பேர் இறந்தநிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,468ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 76 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 46 பேரும் உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பெற்றுவந்தவர்களில் இணைநோய்கள் இல்லாத 22 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,23,258 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 18,016 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 10,90,338 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்