கடந்த 2016 தேர்தலில் நான்கு கட்சிகள் மட்டுமே இடம்பிடித்த தமிழக சட்டமன்றத்தில், இப்போது 10-க்கும் மேற்பட்ட கட்சிகள் இடம்பெறவுள்ளன.
2016-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தின் 15-வது சட்டமன்றத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ், ஐயுஎம்எல் ஆகிய நான்கு கட்சிகள் மட்டுமே இடம்பெற்றது. இதில் அதிமுக 134 இடங்களிலும், திமுக 89 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 இடத்திலும் வெற்றிபெற்றிருந்தனர். நீண்ட காலங்களுக்கு பின்னர் கம்யூனிஸ்ட்கள் உட்பட அதிக கட்சிகள் இடம்பெறாத சட்டசபையாக 15-வது சட்டசபை இருந்தது.
தற்போது நடந்து முடிந்துள்ள 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகளும் சட்டமன்றத்தை அலங்கரிக்கவுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் 18 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் 4 இடங்களிலும், சிபிஎம் 2 இடங்களிலும், சிபிஐ 2 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. மேலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சிகளான மதிமுக நான்கு இடங்களிலும், மனிதநேய மக்கள் கட்சி 2 இடங்களும், கொங்கு மக்கள் தேசிய கட்சி 1 இடத்திலும், தமிழக வாழ்வுரிமை கட்சி 1 இடத்திலும் வெற்றிபெற்றுள்ளது. அதைப்போலவே அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக 5 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட புரட்சி பாரதம் கட்சி 1 இடத்தில் வென்றுள்ளது. இதன் மூலமாக தனிச்சின்னத்தில் போட்டியிட்ட 8 கட்சிகளும், கூட்டணி கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட 5 கட்சிகளும் என மொத்தம் 13 கட்சிகள் சட்டமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த சட்டமன்றத்தில் பல்வேறு கட்சிகளும் இடம்பெறுவதால் பலவகை கருத்துகளும், ஆக்கப்பூர்வமான விவாதங்களும் , மக்கள் பிரச்னைகளும் எதிரொலிக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
முன்னதாக கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் திமுக கூட்டணி 159 இடங்களிலும், அதிமுக 75 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. அறுதி பெரும்பான்மையை பெற்ற திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2RhxY7tகடந்த 2016 தேர்தலில் நான்கு கட்சிகள் மட்டுமே இடம்பிடித்த தமிழக சட்டமன்றத்தில், இப்போது 10-க்கும் மேற்பட்ட கட்சிகள் இடம்பெறவுள்ளன.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்