Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

மோடி அரசு 2.0-ன் 2 ஆண்டுகள் நிறைவு - கொரோனாவை கையாள்வதில் சாதனையா, சோதனையா?

https://ift.tt/3yD9CWY

இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்று இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு. இரண்டு ஆண்டுகளில் பெரும்பாலும் கொரோனாவை சமாளிக்கவே மத்திய அரசு செலவிட்டுள்ளது. இதில் மத்திய அரசு சாதித்தது என்ன, சறுக்கியது என்ன? - சற்றே விரிவாகப் பார்போம்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் தொடங்கிய கொரோனா அலை இன்றும் ஓய்ந்தபாடில்லை. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுக்கத் தொடங்கிய இந்த வைரஸ் தாக்கத்தால் பொதுமக்கள் மத்தியில் ஒருவித பயம் ஏற்படத் தொடங்கிய காலம். மார்ச் மாதத்தில் அந்த அச்சம் கொஞ்சம் கொஞ்சமாக உண்மையாக மாறத் தொடங்கியது. ஏனென்றால் சீனா, அமெரிக்கா, பிரேசில் என உலக நாடுகள் பலவற்றிலும் இதன் கோரத்தாண்டவம் அவ்வளவு மோசமானதாக இருந்தது.

ஆனால், அதே மார்ச் மாதம் 13-ஆம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமோ, 'இந்தியாவில் கொரோனாவால் பொது சுகாதார அவசர நிலை இல்லை. மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை' எனக் கூறியது. ஆனால், அதற்குப் பிறகு உண்மையில் நடந்தது தற்பொழுது வரை துன்பமாக தொடர்ந்துகொண்டிருக்கிறது. கொரோனா விவகாரத்தில் இப்போதும் மத்திய அரசை விமர்சிப்பவர்கள் அரசின் அந்த ஒற்றை கூற்றைதான் முன்வைக்கிறார்கள்.

image

முன்னதாகவே பொதுமக்களுக்கு போதுமான எச்சரிக்கையை கொடுத்து சர்வதேச விமான சேவைகளை நிறுத்தியிருந்தால் இந்தியா இந்த பெரும் தொற்றிலிருந்து சுலபமாக தப்பித்திருக்கலாம் என்பது அவர்கள் கூற்று.

புலம்பெயர் தொழிலாளர்கள் பட்ட துயரங்கள்:

அதன் பின்னர் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துகொண்ட மத்திய அரசு அடுத்தடுத்த வேலைகளில் இறங்கியது. அதன் முதல் பகுதி தான் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட மக்கள் ஊரடங்கு. ஆனால், அது பலனளிக்காத நிலையில் 24ஆம் தேதி பொது மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார். அடுத்தடுத்து நான்கு முறை மே மாத இறுதி வரை இந்த பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டது. இந்த காலத்தில் நாடு முழுவதும் இருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பட்ட துயரங்கள் உலகம் முழுவதும் பெரும் பேசும் பொருளானது.

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை பரந்து விரிந்திருக்கும் இந்திய நாட்டின் நரம்புகளாக ஓடும் நெடுஞ்சாலைகளில் ஆயிரம் ஆயிரம் மனிதத் தலைகள் தங்கள் வாழ்விடமும் நோக்கி கால்நடையாக மிக நீண்ட பயணத்தை மேற்கொண்டனர்.

ஆனால், மத்திய அரசு கொண்டு வந்த பொது முடக்கம் வைரஸ் பரவல் மிக மோசமான நிலையை அடைவதை தடுத்ததாக உலக சுகாதார நிறுவனம் தொடங்கி பல அமைப்புகள் பாராட்டியது. புலம்பெயர் தொழிலாளர்களின் துயரம் ஒருபுறம் இருந்தாலும் அவர்களை பத்திரமாக அழைத்துச் செல்ல சிறப்பு ரயில் சேவையை மத்திய அரசு அறிவித்தது சற்று கால தாமதமான முடிவு என்றாலும் கூட அது ஏராளமானோருக்கு பெரும் பலனை வழங்கியது.

அதுமட்டுமில்லாமல் வெளிநாட்டில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்பதற்காக 'வந்தே பாரத்' என்ற திட்டத்தின் மூலம் விமான சேவையும் இயக்கியது மத்திய அரசு. இதுவும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்கு பெரும் உதவியாக இருந்தது ஆனால் இந்த விமான சேவையில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தது. சில நாடுகள் விமானப் போக்குவரத்தை கட்டண உயர்வை காரணம் காட்டி தடைசெய்தது மற்றொரு கதை.

இந்த இடைப்பட்ட காலத்தில் மத்திய அரசு செய்த மகத்தான ஒரு விஷயம் அடிப்படை மருத்துவ உபகரணங்களை உருவாக்கியது. அதற்கு முன்பு வரை முகக் கவசம் கையுறை வென்டிலேட்டர் போன்றவையெல்லாம் சாமானிய இந்தியனுக்கும் தெரியாத சூழலில் பூஜ்ஜியத்தில் இருந்து அதன் உற்பத்தியை தன்னிறைவு பெறும் வகையில் உற்பத்தி செய்ததுதான். ஆரம்பத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்த பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்ற நிலையில் இருந்து ஏற்றுமதி செய்யும் அளவிற்கு நாடு உயர்ந்தது.

பிரதமர் மோடியின் செய்ல்பாடுகள்:

பொது முடக்க காலத்தில் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களை கௌரவிப்பதற்காக நாட்டு மக்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதற்காகவும் விளக்கு ஏற்றுவது, கை தட்டுவது போன்ற பல விஷயங்களை பிரதமர் மோடி நாட்டு மக்களை செய்ய வலியுறுத்தினார். ஆனால் பெரும்பாலான எதிர்க்கட்சிகள், மக்களை திசை திருப்புவதற்காக பிரதமர் இதையெல்லாம் செய்யச் சொல்கிறார் என கடுமையாக கிண்டல் செய்து இருந்தனர்.

இதற்கிடையில் மற்றொரு சர்ச்சையும் எழுந்தது. அதுதான் பிரதமர் நிவாரண நிதி. பொதுவாக பூகம்பம் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களின் போது நாட்டு மக்களுக்கு உதவுவதற்காக பிரதமரின் பொது நிவாரண நிதியில் நிதி உதவி அளிக்கப்படும். ஆனால் இந்த முறை இதற்காக தனியாக வங்கிக் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் இந்த 'பிஎம்கேர்ஸ்' கணக்கிற்கு எவ்வளவு நிதி உதவி கிடைத்தது என்பது குறித்த வெளிப்படையான தகவல்களை மத்திய அரசு இன்று வரை தெரிவிக்காமல் இருப்பது சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருந்து வருகிறது. இதை எதிர்க் கட்சிகளும் தொடர்ந்து சாடி வருகிறது. ஆனால் மத்திய அரசு இந்த நிதியை கொண்டு நாட்டிற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மருந்துப் பொருட்கள் ஆகியவை வாங்க செலவிடப்பட்டுள்ளதாக கணக்கு காட்டி வருகிறது.

இந்த காலகட்டத்தில் நாட்டின் 80 கோடி மக்களுக்கு அரிசி, கோதுமை மாவு கொண்டைக் கடலை உள்ளிட்ட அத்தியாவசிய ரேஷன் பொருட்களை நாட்டு மக்களுக்கு ஆறு மாதத்திற்கும் மேலாக இலவசமாக வழங்கி இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

image

கொரோனா காலத்தில் பொது முடக்கத்தால் நாட்டின் பொருளாதாரம் கிட்டத்தட்ட அதல பாதாளத்தில் வீழ்ந்தது என்று சொல்லலாம். உலகின் எந்த ஒரு நாடும் சந்திக்காத அளவாக ஜிடிபியின் சரிவு -23 ஆக இருந்தது. இதே நிலை தொடர்ந்தால் நாட்டு மக்கள் சந்திக்கும் பொருளாதார பிரச்னைகளை கற்பனை செய்து பார்க்க முடியாது என்ற அளவிற்கு உலக பொருளாதார வல்லுநர்கள் கருத்துகளை தெரிவிக்க மே 12ஆம் தேதி சுயசார்பு இந்தியா திட்டம் என்னும் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பொருளாதார மீட்பு திட்டங்களை அறிவித்தது மோடி தலைமையிலான மத்திய அரசு. கட்டுமானத்துறை, சிறு, குறு நடுத்தர தொழில்தறை என துறை ரீதியாக இந்த கடன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

முக்கிய சாதனையும் சோதனையும்

கொரோனா காலத்தில் மத்திய அரசின் மற்றொரு முக்கிய சாதனை தடுப்பூசியை கண்டறிந்தது. உலகிலேயே இரண்டு தடுப்பூசிகள் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது இந்தியாவில்தான். அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் கூட இதனை செய்திருக்கவில்லை. தடுப்பூசியை தயாரித்ததோடு மட்டுமல்லாமல் பல நாடுகளுக்கு உதவும் நோக்கில் இலவசமாக ஏற்றுமதியும் செய்யப்பட்டு உலக அரங்கில் மிகப்பெரிய பாராட்டுதலைப் பெற்றது.

ஆனால் போதுமான விழிப்புணர்வு இல்லாததால் முதல்கட்டமாக செலுத்தப்பட்ட முன்கள பணியாளர்கள் கூட நிறைய பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள முன்வரவில்லை. தற்போது அனைவரும் தயாராக இருக்கின்றனர் ஆனால் போதுமான தடுப்பூசி கையிருப்பில் இல்லை. அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கிட்டத்தட்ட வெற்றிகரமான பாதையில் செய்துகொண்டிருக்க இரண்டாவது அலையையும் வெற்றிகரமாக சமாளித்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் இரண்டாவது அலை மிக கோரமான நிலையில் இருப்பதற்கு காரணம் தடுப்பூசி முறையாக சென்று சேராதது தான்.

இதற்கிடையில், இரண்டாவது அலையை சமாளிக்கும் பொறுப்புகளை கிட்டத்தட்ட மாநில அரசுகளின் கைவசம் மத்திய அரசு ஒப்படைத்துவிட்டு இருக்கிறது. பொது முடக்கம் தொடங்கி ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறை மருந்து பற்றாக்குறை உள்ளிட்ட அனைத்தையும் மாநில அரசுகளே சமாளித்து வருகிறது. விமானப்படை ராணுவம் ஆகியவற்றின் உதவியை வழங்குவது, மத்திய அரசு நிறுவனத்தில் ஆக்சிஜனை உற்பத்தி செய்து அதனை மாநில அரசுகளுக்கு வழங்குவது போன்ற விஷயங்களை மத்திய அரசு செய்தாலும் டெல்லி உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களுக்கு அது முறையாக சென்று சேராததாலும் இரண்டாவது அலையின் பாதிப்புகளை முறையாக கணிக்காததாலும், ஆக்சிஜன் இல்லாமல் மூச்சுத் திணறி இறந்த இந்தியர்களின் துயரம் இன்று கூட நடந்து வருகிறது.
சாலைகளிலும் பூங்காக்களிலும் கூட சடலங்களை எரிக்க இடமில்லாமல கங்கை யமுனை ஆகிய நதிகளின சடலங்களை வீசி எறிந்து அந்தக் கோரக் காட்சிகள் புகைப்படங்களாக வெளிவந்து உள்ளூர் முதல் உலக பத்திரிகைகள் வரை அதனை மிக வேதனையோடும் கோபத்துடனும் வெளியிட்டுள்ளது.

இப்படி நிறைய சறுக்கல்களும் சில சமாளிப்புகளுமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்புடன் நாட்டை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. இனி அரசிடம் உள்ள ஒரே சவால்... முதல் சவால்... தடுப்பூசி உற்பத்தியினை பல மடங்காக உயர்த்தி அடுத்த சில மாதங்களுக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் செலுத்தப்பட்டு இருப்பதுதான். இனி அடுத்தடுத்த நாட்களை மத்திய அரசு அதற்காக நகர்த்து என எதிர்பார்க்கலாம்.

இந்தக் கொரோனா பேரிடர் காலத்தை கையாண்ட விதத்திலிருந்தே இரண்டு ஆண்டுகளின் பாஜக அரசு செயல்பாடுகளில் மிகுந்திருப்பது சாதனைகளா அல்லது சோதனைகளா என்பது தெளிவாக அறியலாம்.

- நிரஞ்சன் குமார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்