சுனில்குமாருடன் அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். அப்போது சுனில்குமார் கண்கலங்கினார்.
1988-ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரியான இவர் இன்றுடன் ஓய்வு பெற்றதையொட்டி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பிரிவுபசார விழா நடந்தது. காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை வழங்கினர். நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது இன்றுடன் ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமார் தனது குடும்பத்துடன் பங்கேற்றார். தமிழக காவல்துறை இயக்குனரும் சட்டம்- ஒழுங்கு டிஜிபியுமான திரிபாதி அவருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். பிறகு சுனில்குமாருடன் அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளும் குரூப் போட்டோ எடுத்த கொண்டனர். அப்போது சுனில்குமார் கண்கலங்கினார்.
உறுப்புதானம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட காரணமாக இருந்தவர் டிஜிபி சுனில்குமார். உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியைச் சேர்ந்தவர். 1961ம் ஆண்டு பிறந்தார். எம்ஏ, எல்எல்பி பட்டங்களை முடித்துள்ளார். தமிழ், ஆங்கிலம், இந்தி தெரிந்தவர். இவர், 1988ம் ஆண்டு, ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று, தமிழக பணிக்காக நியமிக்கப்பட்டார்.
கூடுதல் எஸ்பியாக வேலூரில் முதன் முதலாக பணியில் நியமிக்கப்பட்டார். பின்னர் காவல் துறையின் பல்வேறு பதவிகளில் பணியாற்றி உள்ளார். டிஜிபியாக பதவி உயர்வு பெற்று, மனித உரிமை ஆணையத்திலும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவிலும் பணியாற்றினார். இவர், சென்னை போக்குவரத்துப் பிரிவு கூடுதல் கமிஷனராக இருந்தபோது உடலுறுப்பு தானத்திற்காக சென்னையில் பசுமை வழித்தடம் ஏற்பாடு செய்யப்பட்டது.
ரயில் விபத்து வழக்கு ஒன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். முற்றிலும் அறிவியல்பூர்வமான விசாரணையின் அடிப்படையில் ரயில் எஞ்சின் ஓட்டுனரின் மேல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஐந்து அப்பாவிகளின் உயிரைப் பறித்த ஒரு விமான நிறுவனத்தின் உரிமையாளரின் மகன் ஏற்படுத்திய விபத்தில், அந்த நபரின் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது.
வாச்சாத்தியில் பொய்யாகக் குற்றம்சாட்டப்பட்ட காவல் அதிகாரிக்கு உறுதுணையாக நின்றார். சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் பணியாற்றியபோது, 25 சதவீதத்துக்கும் அதிகமான தமிழ்நாடு காவல்படையினரைத் தேர்வு செய்ததில் பங்காற்றி இருக்கிறார். தூத்துக்குடியில் பணியாற்றியபோது சாதி கலவரத்தை கட்டுப்படுத்தி, அமைதியை ஏற்படுத்தினார் என்று காவல்துறை உயர் அதிகாரிகள் பெருமையாக கூறி உள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்