மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 24 மணி நேரம் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நான்கு கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இன்னும் 4 கட்ட தேர்தல்கள் மீதமுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், தேர்தல் பரப்புரையில் மதரீதியாக வாக்கு சேகரிப்பில் மம்தா பானர்ஜி ஈடுபட்டது நடத்தை விதி மீறல் என்று அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 24 மணி நேரம் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அதன்படி இன்று இரவு 8 மணி வரை பரப்புரை செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு கருப்பு தினமாகும் என்று திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, தேர்தல் ஆணையத்தின் தடையை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்