சீர்காழி அருகே மணிகிராமத்தில் இறந்த தம்பியின் உடலை எடுத்துச் செல்ல அனுமதி மறுத்து வழியை மூடிய அண்ணனால் பரபரப்பு ஏற்பட்டது. உறவினர்கள் சாலை மறியலை அடுத்து வழி திறக்கப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த மணிகிராமம் தச்சர் தெருவை சேர்ந்தவர் சபாபதி (75). இவரது அண்ணன் கலியபெருமாள் (80). இவர்கள் அருகருகே தங்களுக்கு சொந்தமான வீடுகளில் வசித்து வருகின்றனர். கலியபெருமாள் வீட்டை கடந்தே சபாபதி வீட்டீற்கு சென்று வரமுடியும். இதனால் இருவரிடையே ஏற்பட்ட தகராறில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு நடைபெற்று வரும் நிலையில் சபாபதி நேற்று திடீரென உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரின் உடலை உறவினர்களை பார்க்க விடாமலும் எடுத்து செல்ல வழி மறுத்தும் கலியபெருமாள் பிரதான வழியை பூட்டி வைத்தார். இதையடுத்து போலீசாரும் வருவாய்த் துறையினரும் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனையடுத்து சபாபதி உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர். இதனையடுத்து இறந்த சபாபதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இடபிரச்னையில் இறந்து போன தம்பியின் உடலை எடுத்துச் செல்ல அண்ணனே வழிமறுத்த நிகழ்வு அப்பகுதி மக்களியே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3fAzXOgசீர்காழி அருகே மணிகிராமத்தில் இறந்த தம்பியின் உடலை எடுத்துச் செல்ல அனுமதி மறுத்து வழியை மூடிய அண்ணனால் பரபரப்பு ஏற்பட்டது. உறவினர்கள் சாலை மறியலை அடுத்து வழி திறக்கப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த மணிகிராமம் தச்சர் தெருவை சேர்ந்தவர் சபாபதி (75). இவரது அண்ணன் கலியபெருமாள் (80). இவர்கள் அருகருகே தங்களுக்கு சொந்தமான வீடுகளில் வசித்து வருகின்றனர். கலியபெருமாள் வீட்டை கடந்தே சபாபதி வீட்டீற்கு சென்று வரமுடியும். இதனால் இருவரிடையே ஏற்பட்ட தகராறில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு நடைபெற்று வரும் நிலையில் சபாபதி நேற்று திடீரென உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரின் உடலை உறவினர்களை பார்க்க விடாமலும் எடுத்து செல்ல வழி மறுத்தும் கலியபெருமாள் பிரதான வழியை பூட்டி வைத்தார். இதையடுத்து போலீசாரும் வருவாய்த் துறையினரும் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனையடுத்து சபாபதி உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர். இதனையடுத்து இறந்த சபாபதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இடபிரச்னையில் இறந்து போன தம்பியின் உடலை எடுத்துச் செல்ல அண்ணனே வழிமறுத்த நிகழ்வு அப்பகுதி மக்களியே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்