உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையை மாநில அரசு குறைத்து வெளியிடுவதாக அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டி உள்ளார்.
சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், ''பாஜக அரசின் தவறான நிா்வாகம் மற்றும் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த குறுகிய பார்வை காரணமாக உத்தரப்பிரதேசம் ‘கொரோனா பிரதேச’ மாநிலமாக மாறியுள்ளது.
மாநிலத்தில் உடல்களை எரியூட்டும் இடங்களில் கூட்டம் அலைமோதும் நிலையில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டுவதற்காக தவறான புள்ளி விவரங்களை மாநில அரசு வெளியிட்டு வருகிறது. அரசின் இந்த தோல்வி குறித்து, பாஜக எம்.பி., எம்.எல்.ஏ.க்களே அதிருப்தி தெரிவித்து வருகின்றனா்.
பாஜக சார்பில் வெளியிடப்பட்ட மருத்துவர்கள் எண்ணிக்கை, மருத்துவமனைகள் மற்றும் பிற வசதிகள் தொடா்பான புள்ளி விவரங்களும் போலியானவையே. ஆட்சியில் இருப்பது குறித்து பாஜக இனி பெருமைபடக் கூடாது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள்போல எண்ணி, அவா்களின் வீடுகளிலேயே ஆக்சிஜன் கிடைப்பதை பாஜக அரசு உறுதிப்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பூசிகளுக்கான கட்டணம் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நிா்ணயிக்கப்பட வேண்டும் என்று அவார் தெரிவித்துள்ளாா்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3dRP98nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையை மாநில அரசு குறைத்து வெளியிடுவதாக அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டி உள்ளார்.
சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், ''பாஜக அரசின் தவறான நிா்வாகம் மற்றும் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த குறுகிய பார்வை காரணமாக உத்தரப்பிரதேசம் ‘கொரோனா பிரதேச’ மாநிலமாக மாறியுள்ளது.
மாநிலத்தில் உடல்களை எரியூட்டும் இடங்களில் கூட்டம் அலைமோதும் நிலையில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டுவதற்காக தவறான புள்ளி விவரங்களை மாநில அரசு வெளியிட்டு வருகிறது. அரசின் இந்த தோல்வி குறித்து, பாஜக எம்.பி., எம்.எல்.ஏ.க்களே அதிருப்தி தெரிவித்து வருகின்றனா்.
பாஜக சார்பில் வெளியிடப்பட்ட மருத்துவர்கள் எண்ணிக்கை, மருத்துவமனைகள் மற்றும் பிற வசதிகள் தொடா்பான புள்ளி விவரங்களும் போலியானவையே. ஆட்சியில் இருப்பது குறித்து பாஜக இனி பெருமைபடக் கூடாது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள்போல எண்ணி, அவா்களின் வீடுகளிலேயே ஆக்சிஜன் கிடைப்பதை பாஜக அரசு உறுதிப்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பூசிகளுக்கான கட்டணம் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நிா்ணயிக்கப்பட வேண்டும் என்று அவார் தெரிவித்துள்ளாா்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்