சென்னையில் கள்ளச்சந்தை மூலமாக ரெம்டெசிவிர் மருந்து அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
ரெம்டெசிவிர் மருந்து யார் எடுத்துக்கொள்ளலாம்? - 'கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு செயற்கை சுவாசத்தின் உதவியால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு ரெம்டெசிவிர் கொடுக்கும்போது, அவரின் இறப்பு விகிதம் பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் கொரோனா நோயாளிகள் அனைவருக்கும் இந்த மருந்து தேவைப்படுதில்லை. ஒரு சில நேரங்களில் மருத்துவர் முடிவு செய்தால் மிகவும் குறைந்த அளவில் 18 வயதுக்கு குறைந்தவர்களும், கர்ப்பிணிகளும் ரெம்டெசிவிர் மருந்தை எடுத்துக்கொள்ள முடியும்.
அதேநேரம் சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் நெடுநாட்களாக பிரச்னை உள்ளவர்களுக்கும், ஏதேனும் தடுப்பு மருந்து கொடுத்தால் உடனடி எதிர்மறை விளைவு ஏற்படும் நோயாளிகளுக்கும் இந்த மருந்தை கொடுக்கக் கூடாது' என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
கள்ளசந்தை மூலம் அதிகவிலைக்கு விற்கப்படும் ரெம்டெசிவிர்?
சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தின் விலை குப்பிக்கு ஒன்று ரூ.900 முதல் ரூ.4,800 வரையாக உள்ள நிலையில், சென்னையில் ரெம்டெசிவிர் மருந்தை சில மர்ம நபர்கள் கள்ளச்சந்தை மூலமாக அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து மயிலாப்பூர் கொரொனா நோயாளி ஒருவர் கூறும்போது, “ ஒரு ரெம்டெசிவிர் குப்பிக்கு 14,000 ரூபாய் என 6 குப்பிகளை வாங்கினேன். கள்ளச்சந்தை மூலமாக, நான் ஆர்டர் செய்த 2 நாட்களில் மருந்து கிடைத்துவிட்டது ” என்றார். இந்தக் கள்ளச்சந்தையின் மூலம் விற்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து விவரங்களை தெரிந்துகொள்ள 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' சில மருந்து விற்பனையாளர்களை தொடர்பு கொண்டு பேசியது. அதில் 4 விற்பனையாளர்கள் தங்களிடம் மருந்து தீர்ந்துவிட்டது என்றும், 2 விற்பனையாளர்கள் ஒரு குப்பி ரெம்டெசிவிர் மருந்தை 6,500 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகவும் கூறியுள்ளனர்.
ரெம்டெசிவிர் மருந்துகளை உரிமம் பெற்ற மருந்து விற்பனையாளர்கள் மட்டுமே விற்க வேண்டும் என்ற சூழ்நிலை இருக்கும்போது, சென்னையிலுள்ள மருந்து விற்பனையாளர்கள் இந்த மாத முதல் வார தொடக்கத்தில் இருந்து ரெம்டெசிவிர் மருந்துகளை நோயாளிகள், மருந்தகம் நடத்துவோருக்கு விற்பனையாளர்கள் விற்று வருவதாக சொல்லப்படுகிறது.
கள்ளச்சந்தை மூலம் கொண்டுவரப்படும் இந்த ரெம்டெசிவிர் மருந்துகள் பெரும்பாலும் வடமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படுவதாக மருந்து விற்பனையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இது குறித்து தமிழக மருந்து கட்டுப்பாட்டின் மூத்த அதிகாரி ஒருவரிடம் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' கேட்டபோது, “இதுவரை இது போன்ற புகார்கள் எங்களுக்கு வரவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி விற்பனை செய்வோரின் உரிமம் சரிபார்க்கப்பட்ட பின்னரே அவர் மருந்து விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவார்” என்றார்.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ரெம்டெசிவிர் மருந்தை முறையின்றி விற்பனை செய்வதாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இங்குள்ள காவல் நிலையங்களில் அதுபோன்ற எந்த வழக்குகளும் பதிவு செய்யப்படுவதில்லை என்பது கவனிக்கத்தக்கது.
'தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கிடைக்க அரசு உதவுவது இல்லை' - அதேபோல, தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவிர் மருந்துகளை பெற அரசு உதவுவது இல்லை என்ற குற்றம்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இது குறித்து இந்திய மருத்துவ சங்கம் மாநில செயலாளர் ரவிகுமார் கூறும்போது, “ ரெம்டெசிவிர் மருந்துகளை தனியார் மருத்துவமனைகளுக்கு விநியோகிக்க நாங்கள் தமிழ்நாடு மருத்துவ சேவை நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்தோம். ஆனால் ஒரு வாரம் ஆனப்பின்னரும், அவர்கள் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை” என்றார்.
வெங்கடேஷ்வரா மருத்துவமனை சார்பில் பேசிய ராமகிருஷ்ணன் கூறும்போது, “தமிழகத்திற்கு அரசு சார்பில் கொண்டுவரப்படும் ரெம்டெசிவிர் மருந்துகள், மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ள அரசு அதிகாரிகள் மூலம் விநியோகிப்படுகிறது. அதனை பெற விரும்பும் நோயாளிகள், அதற்கான மருத்துவ ஆவணங்கள் மற்றும் ஆதார் அட்டை தகவல்களை கொடுக்க வேண்டும்” என்றார்.
தற்போது தனியார் மருத்துவமனைகளுக்கு 7,000 குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் தேவைப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆகையால் ரெம்டெசிவிர் மருந்துகளை கள்ளச்சந்தை மூலமாக அதிக விலைக்கு விற்பனை செய்யும் கும்பலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
- தகவல் உறுதுணை: டைம்ஸ் ஆஃப் இந்தியா
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்