பெங்களூருவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை மின் மயானத்தில் எரிக்க டோக்கன்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. சராசரியாக நாள்தோறும் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக பெங்களூருவில் மட்டும் நாள்தோறும் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது.
இதனால் உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 147 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக பெங்களூருவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்கள் மின் மயானத்தில் எரிக்கப்படுகிறது. பெங்களூருவில் 8 மின் மயானங்கள் உள்ளன. இங்கு நாள் ஒன்றுக்கு அதிகப்படியாக 20 சடலங்கள் மட்டுமே எரிக்க முடியும்.
ஆனால் நாள்தோறும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சுமனஹள்ளி மற்றும் கூடலு பகுதியில் உள்ள மின் மயானத்திற்கு அதிகளவில் சடலங்கள் வருவதால், சடலங்களை எரிக்க அங்குள்ள ஊழியர்கள் டோக்கன் விநியோகம் செய்து வருகிறார்கள்.
இதனால் சுமனஹள்ளி மற்றும் கூடலு பகுதியில் உள்ள மின் மயானங்களில் சடலங்களுடன் நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிற்கின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்