மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் காலமானார். அவருக்கு வயது 59.
மாரடைப்பு காரணமாக நேற்று காலை 11 மணி அளவில் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் விவேக் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் நினைவு இழந்த நிலையில் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து நடிகர் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அதிகாலை 4.35 மணிக்கு உயிர் பிரிந்தது.
கோவில்பட்டியில் 1961ஆம் ஆண்டு பிறந்தவர் நடிகர் விவேக். 1986 - 1992 ஆண்டுகளில் தலைமைச் செயலக ஊழியராக பணியாற்றினார். கே.பாலச்சந்தரின் 'மனதில் உறுதி வேண்டும்' படம் மூலம் அறிமுகமானார் விவேக். தனி காமெடியனாக புகழ்பெறச் செய்த திரைப்படம் 'காதல் மன்னன்'. குஷி, தூள், ரன் என பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றவர்
2000 மற்றும் 2001-ம் ஆண்டுகளில் மட்டுமே 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் முத்திரை பதித்துள்ளார் விவேக். விவேக்கிற்கு 2009-ம் ஆண்டு 'பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட்டது. சிறந்த காமெடியனாக தமிழக அரசின் விருதை 5 முறை பெற்றிருக்கிறார். அப்துல் கலாம் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தவர் விவேக். தமிழகம் முழுவதும் 1 கோடி மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். நகைச்சுவை மூலம் ஏற்படுத்திய விழிப்புணர்வால் சின்னக் கலைவாணர் என அழைக்கப்பட்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3snw1TPமாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் காலமானார். அவருக்கு வயது 59.
மாரடைப்பு காரணமாக நேற்று காலை 11 மணி அளவில் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் விவேக் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் நினைவு இழந்த நிலையில் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து நடிகர் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அதிகாலை 4.35 மணிக்கு உயிர் பிரிந்தது.
கோவில்பட்டியில் 1961ஆம் ஆண்டு பிறந்தவர் நடிகர் விவேக். 1986 - 1992 ஆண்டுகளில் தலைமைச் செயலக ஊழியராக பணியாற்றினார். கே.பாலச்சந்தரின் 'மனதில் உறுதி வேண்டும்' படம் மூலம் அறிமுகமானார் விவேக். தனி காமெடியனாக புகழ்பெறச் செய்த திரைப்படம் 'காதல் மன்னன்'. குஷி, தூள், ரன் என பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றவர்
2000 மற்றும் 2001-ம் ஆண்டுகளில் மட்டுமே 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் முத்திரை பதித்துள்ளார் விவேக். விவேக்கிற்கு 2009-ம் ஆண்டு 'பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட்டது. சிறந்த காமெடியனாக தமிழக அரசின் விருதை 5 முறை பெற்றிருக்கிறார். அப்துல் கலாம் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தவர் விவேக். தமிழகம் முழுவதும் 1 கோடி மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். நகைச்சுவை மூலம் ஏற்படுத்திய விழிப்புணர்வால் சின்னக் கலைவாணர் என அழைக்கப்பட்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்