மத்திய அரசின் சரியான திட்டமிடுதல் இல்லாததால்தான் தடுப்பூசி பற்றாக்குறை, ரெம்டெசிவர் பற்றாக்குறை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. இது அரசாங்கத்தின் தோல்வி என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
கொரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்வதில் மத்திய அரசின் தோல்வி குறித்த மூன்று விஷயங்களை பட்டியலிட்டுள்ள பிரியங்கா காந்தி...
1 ) உலகிலேயே இந்தியாவில்தான் ஆக்ஸிஜன் உற்பத்தி அதிகம் நடக்கிறது. அப்படி இருக்கையில் ஏன் இங்கு கடும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது?. கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலைக்கு இடையில் உங்களுக்கு 8-9 மாதங்கள் இருந்தன. அப்படியிருந்தும் ஏன் போதிய ஆக்சிஜன் உற்பத்திசெய்யாமல், நீங்கள் அதை புறக்கணித்தீர்கள்?
2) இன்று, இந்தியாவில் 2000 லாரிகள் மட்டுமே ஆக்சிஜன் உள்ளது. எல்லா இடங்களிலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுகிறது, எந்த இடத்துக்கும் சரிவர ஆக்சிஜன் கிடைப்பதில்லை. கடந்த 6 மாதங்களில் 1.1 மில்லியன் ரெம்டெசிவர் ஊசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இப்போது நாம் ரெம்டெசிவர் மருந்து பற்றாக்குறையை எதிர்கொள்கிறோம்
3) ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை அரசு 6 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்தது. ஆனால் இந்த காலகட்டத்தில் 3-4 கோடி இந்தியர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி செலுத்துவதில் இந்தியர்களுக்கு ஏன் முன்னுரிமை வழங்கவில்லை?
தடுப்பூசி பற்றாக்குறை மோசமான திட்டமிடல் காரணமாகவும், சரியான திட்டமிடல் இல்லாததால் ரெம்டெசிவர் பற்றாக்குறையும், தொலைநோக்கு பார்வை இல்லாததால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாகவும் உள்ளது. இது அரசாங்கத்தின் தோல்வி என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3sDRcB4மத்திய அரசின் சரியான திட்டமிடுதல் இல்லாததால்தான் தடுப்பூசி பற்றாக்குறை, ரெம்டெசிவர் பற்றாக்குறை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. இது அரசாங்கத்தின் தோல்வி என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
கொரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்வதில் மத்திய அரசின் தோல்வி குறித்த மூன்று விஷயங்களை பட்டியலிட்டுள்ள பிரியங்கா காந்தி...
1 ) உலகிலேயே இந்தியாவில்தான் ஆக்ஸிஜன் உற்பத்தி அதிகம் நடக்கிறது. அப்படி இருக்கையில் ஏன் இங்கு கடும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது?. கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலைக்கு இடையில் உங்களுக்கு 8-9 மாதங்கள் இருந்தன. அப்படியிருந்தும் ஏன் போதிய ஆக்சிஜன் உற்பத்திசெய்யாமல், நீங்கள் அதை புறக்கணித்தீர்கள்?
2) இன்று, இந்தியாவில் 2000 லாரிகள் மட்டுமே ஆக்சிஜன் உள்ளது. எல்லா இடங்களிலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுகிறது, எந்த இடத்துக்கும் சரிவர ஆக்சிஜன் கிடைப்பதில்லை. கடந்த 6 மாதங்களில் 1.1 மில்லியன் ரெம்டெசிவர் ஊசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இப்போது நாம் ரெம்டெசிவர் மருந்து பற்றாக்குறையை எதிர்கொள்கிறோம்
3) ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை அரசு 6 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்தது. ஆனால் இந்த காலகட்டத்தில் 3-4 கோடி இந்தியர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி செலுத்துவதில் இந்தியர்களுக்கு ஏன் முன்னுரிமை வழங்கவில்லை?
தடுப்பூசி பற்றாக்குறை மோசமான திட்டமிடல் காரணமாகவும், சரியான திட்டமிடல் இல்லாததால் ரெம்டெசிவர் பற்றாக்குறையும், தொலைநோக்கு பார்வை இல்லாததால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாகவும் உள்ளது. இது அரசாங்கத்தின் தோல்வி என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்