Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!

https://ift.tt/3gsiDeZ

கொரோனா காரணமாக மூச்சுத் திணறலால் அவதிப்படும் நோயாளிகளுக்கு தனது காரை விற்று மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி கொடுத்து வருகிறார் ஷாஹனாவாஸ் என்ற இளைஞர்.

கொரோனா இரண்டாவது அலையில் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதால் மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. சில இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க சொல்லி, பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். டாடா குழுமம், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனங்களும் கூட ஆக்சிஜன் சிலிண்டர்களை உற்பத்தி செய்து மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றன. இதேபோல் சில தனிநபர்களும் தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், மும்பையின் மலாட் நகரில் வசிக்கும் ஷாஹனாவாஸ் ஷேக் 'ஆக்சிஜன் மேன்' என்று அந்தப் பகுதியில் பிரபலமாக அழைக்கப்பட்டு வருகிறார். இந்த இக்கட்டான காலகட்டத்தில், மக்களுக்கு உதவுவதற்காக ஷாஹனாவாஸ் சில நாட்களுக்கு முன்பு தனது ரூ.22 லட்சம் மதிப்புள்ள எஸ்யூவி காரை விற்றுள்ளார். காரை விற்று கிடைத்த பணத்தில் ஷாஹனாவாஸ் 160 ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கினார். இதை தனது இடத்தில் வைத்திருப்பவர், ஆக்சிஜன் சிலிண்டர் உதவி என்று கேட்டு அவரை தொடர்புகொண்டால், உடனே சிலிண்டரை கொண்டு டெலிவரி செய்து வருகிறார்.

image

மக்களுக்கு சரியான நேரத்தில் உதவி வழங்க வேண்டும் என்பதற்காக, ஷாஹனாவாஸ் ஒரு குழு ஒன்றையும், ஹெல்ப்லைன் எண்ணையும் வெளியிட்டு ஒரு கட்டுப்பாட்டு அறையையும் அமைத்துள்ளார். கட்டுப்பாட்டு அறைக்கு யாரேனும் தொலைபேசியில் அழைத்தால் போதும், அவர்களுக்கு உதவி வருகிறார். கடந்த ஆண்டில் இருந்து தற்போது வரை 4000-க்கும் மேற்பட்டவர்களுக்கு உதவிய அவரது குழு, சிலிண்டர்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நோயாளிகளுக்கு விளக்குவதையும் கடமையாக வைத்துள்ளார்கள்.

கடந்த ஆண்டு இதேபோல் ஒரு சூழ்நிலை வந்தபோது, ஏழைகளுக்கு உதவி செய்யும்போது பணம் இல்லாமல் போய்விட்டதாக வருத்தப்படுகிறார் ஷாஹனாவாஸ். மேலும் கடந்த ஆண்டு நடந்த சில சம்பவங்களை நினைவுகூர்கிறார். ``கடந்த ஆண்டு, உடல்நலக்குறைவு காரணமாக இருந்த தனது நண்பரின் மனைவி ஆட்டோவில் செல்லும்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்துவிட்டார்.

அதன் பிறகு மும்பையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கல் முகவராக பணியாற்ற முடிவு செய்தேன். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த முறை நிலைமை சற்று மோசமாக இருக்கிறது. இந்த ஜனவரியில் ஆக்சிஜன் வேண்டி எனக்கு 50 அழைப்புகள் வரை மட்டுமே வந்தது. ஆனால் தற்போது ஒவ்வொரு நாளும் 500 முதல் 600 தொலைபேசி அழைப்புகள் ஆக்சிஜன் வேண்டி வருகின்றன" என்றார் ஷாஹனாவாஸ்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்