தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரமலான் நோன்பு இன்று தொடங்கியது.
புதன்கிழமை அதிகாலை முதல் நோன்பு தொடங்கலாம் என தலைமை காஜி முன்னதாக தெரித்திருந்தார். அதன்படி, பல்வேறு இடங்களில் சிறப்புத் தொழுகையுடன் இஸ்லாமியர்கள் இன்று நோன்பை தொடங்கினர். புகழ்பெற்ற நாகூர் தர்காவில் கொரோனா விதிகளை பின்பற்றி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
நோன்பு காலங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படும் நாகூர் தர்காவில் குறைந்த அளவிலேயே தொழுகைக்கு வந்திருந்தனர். மதுரை மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் இரவு நேர சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். மகபூப்பாளையம், மேலூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், சோழவந்தான், உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இதே போன்று புதுச்சேரி மாநிலத்திலும் ரமலான் நோன்பு தொடங்கியது. பல்வேறு மசூதிகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு தொழுகையை மேற்கொண்டனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்