மேற்கு வங்க தேர்தலில் எட்டாவது மற்றும் கடைசிக் கட்டமாக 35 தொகுதிகளில் தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது, இன்றுடன் 5 மாநில தேர்தல் வாக்குப்பதிவும் நிறைவடைவதால் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு இன்று மாலை வெளியாக உள்ளது.
மேற்கு வங்க தேர்தலில் எட்டாவது மற்றும் கடைசிக் கட்டமாக 35 தொகுதிகளில் தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 9.31 மணி வரை 16 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6.30 மணிக்கு முடிவடைய உள்ளது. இதற்கென 11 ஆயிரத்து 860 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்றைய தேர்தலில் வாக்களிக்க 84 லட்சத்து 77 ஆயிரத்து 728 பேர் தகுதி பெற்றுள்ளனர். தேர்தல்களில் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் 35 தொகுதிகளில் 11 தொகுதிகள் ரெட் அலர்ட் தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. களம் காணும் 283 வேட்பாளர்களில் 64 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படி, கிரிமினல் வழக்குகளை பின்னணியாக கொண்ட மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி ரெட் அலர்ட் தொகுதியாக கருதப்படும். 294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்கத்தில் வேட்பாளர்கள் மரணம் காரணமாக 2 தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 5 மாநில தேர்தல் நிறைவடையும் சூழலில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு இன்று மாலை வெளியாக உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்குவங்கத்தில் பதிவான வாக்குகள் வரும் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட உள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2QxcW4Xமேற்கு வங்க தேர்தலில் எட்டாவது மற்றும் கடைசிக் கட்டமாக 35 தொகுதிகளில் தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது, இன்றுடன் 5 மாநில தேர்தல் வாக்குப்பதிவும் நிறைவடைவதால் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு இன்று மாலை வெளியாக உள்ளது.
மேற்கு வங்க தேர்தலில் எட்டாவது மற்றும் கடைசிக் கட்டமாக 35 தொகுதிகளில் தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 9.31 மணி வரை 16 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6.30 மணிக்கு முடிவடைய உள்ளது. இதற்கென 11 ஆயிரத்து 860 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்றைய தேர்தலில் வாக்களிக்க 84 லட்சத்து 77 ஆயிரத்து 728 பேர் தகுதி பெற்றுள்ளனர். தேர்தல்களில் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் 35 தொகுதிகளில் 11 தொகுதிகள் ரெட் அலர்ட் தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. களம் காணும் 283 வேட்பாளர்களில் 64 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படி, கிரிமினல் வழக்குகளை பின்னணியாக கொண்ட மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி ரெட் அலர்ட் தொகுதியாக கருதப்படும். 294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்கத்தில் வேட்பாளர்கள் மரணம் காரணமாக 2 தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 5 மாநில தேர்தல் நிறைவடையும் சூழலில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு இன்று மாலை வெளியாக உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்குவங்கத்தில் பதிவான வாக்குகள் வரும் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட உள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்