தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 2,380 குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தேர்தல் பறக்கும்படையினர் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று நடந்த சோதனையில் சென்னையிலிருந்து திண்டிவனம் வந்தவாசி சாலையில் வந்த கண்டெய்னர் லாரியில் 2,380 குக்கர்களை ஏற்றிக்கொண்டுவந்த லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த வாகனத்தை சோதனை செய்ததில் குக்கர்கள் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்டது கண்டறியப்பட்டது.
வாகனத்தை ஓட்டிவந்தவர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், அவரிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த பறக்கும்படையினர், அது வாக்களர்களுக்கு கொண்டுசெல்லப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3rHDn4pதேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 2,380 குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தேர்தல் பறக்கும்படையினர் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று நடந்த சோதனையில் சென்னையிலிருந்து திண்டிவனம் வந்தவாசி சாலையில் வந்த கண்டெய்னர் லாரியில் 2,380 குக்கர்களை ஏற்றிக்கொண்டுவந்த லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த வாகனத்தை சோதனை செய்ததில் குக்கர்கள் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்டது கண்டறியப்பட்டது.
வாகனத்தை ஓட்டிவந்தவர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், அவரிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த பறக்கும்படையினர், அது வாக்களர்களுக்கு கொண்டுசெல்லப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்