கொரோனா தடுப்பூசி விலையைக் குறைக்க உத்தரவிட வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில், மத்திய அரசே கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசியை மத்திய அரசு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துதோடு, தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான மாற்று வழிகளையும் ஆராய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசியின் விலை உயர்வு மாநிலங்களுக்கு மேலும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் எனவும் முதல்வர் பழனிசாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பூசி மையங்களை அதிகரிக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுத்தி உள்ள நிலையில் முதல்வர் இதனை தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்