கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் வங்கிகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் வரும் 30-ஆம் தேதி வரை வங்கிகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என வங்கிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிப் பணியாளர்கள் இணை நோயுள்ளவர்களாகவும், கர்ப்பிணிகளாகவும், பார்வை மாற்றுத் திறனாளிகளாகவும் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு வீட்டிலிருந்தே பணிபுரியும் வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கிகளில் உள்ள ஆதார் திருத்த மையங்களின் பணிகளும் நிறுத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. வங்கி செயல்பாட்டு நேரம் குறைக்கப்பட்டாலும் ஏடிஎம் சேவைகளில் எவ்வித பாதிப்புகளும் இல்லாமல் தங்குதடையின்றி இயங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3gyJdTIகொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் வங்கிகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் வரும் 30-ஆம் தேதி வரை வங்கிகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என வங்கிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிப் பணியாளர்கள் இணை நோயுள்ளவர்களாகவும், கர்ப்பிணிகளாகவும், பார்வை மாற்றுத் திறனாளிகளாகவும் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு வீட்டிலிருந்தே பணிபுரியும் வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கிகளில் உள்ள ஆதார் திருத்த மையங்களின் பணிகளும் நிறுத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. வங்கி செயல்பாட்டு நேரம் குறைக்கப்பட்டாலும் ஏடிஎம் சேவைகளில் எவ்வித பாதிப்புகளும் இல்லாமல் தங்குதடையின்றி இயங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்