மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் 19வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாடின. முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 191 ரன்களை குவித்தது. தொடர்ந்து அந்த இலக்கை விரட்டியது பெங்களூர்.
கேப்டன் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இருவரும் 44 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். கோலி 8 ரன்களில் சாம் கரண் பந்து வீச்சில் வெளியேறினார். தொடர்ந்து படிக்கல் 34 ரன் குவித்து தாக்கூர் வேகத்தில் வீழ்ந்தார். பின்னர் வாஷிங்டன் சுந்தர் களத்திற்கு வந்தார். இருப்பினும் ஜடேஜா சுழலில் 7 ரன்களில் அவர் வெளியேறினார்.
தொடந்து மேக்ஸ்வெல் மற்றும் டிவில்லியர்ஸ் ஜடேஜா வீசிய அடுத்தடுத்த ஓவரில் அவுட்டாகி இருந்தனர். இருவரும் கிளீன் போல்டாகி இருந்தனர். டேனியல் கிறிஸ்டியனை டைரக்ட் ஹிட் செய்து ஜடேஜா வெளியேற்றினார்.
All Over: A comprehensive win for @ChennaiIPL as they beat #RCB by 69 runs and also end their four-match unbeaten streak in #IPL2021.#CSK take the No. 1 spot in the table now. https://t.co/wpoquMXdsr #CSKvRCB #VIVOIPL pic.twitter.com/r1zCPv8mub
— IndianPremierLeague (@IPL) April 25, 2021
ஹர்ஷல் பட்டேல், சைனி, ஜேமிசன் என அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். முடிவில் பெங்களூர் அணி 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களை மட்டுமே எடுத்தது. அதன் மூலம் சென்னை அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தொடர்ந்து 4 முறை வெற்றி வாகை சூடிய பெங்களூர் அணிக்கு சென்னை அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதேசமயம் தனது தொடர் 4வது வெற்றியை சென்னை அணி பதிவு செய்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்