'தேர்தல் என்பது போர்க்களம் அல்ல, வெற்றி அல்லது தோல்வி ஆகிய இரு முனைகளை மட்டுமே தேர்தலின் முடிவு என கருதிக்கொள்ள கூடாது' என கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் சக வேட்பாளர்களுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் கடிதம் எழுதியிருக்கிறார்.
தான் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் களத்தில் உள்ள சக வேட்பாளர்களுக்கு மக்கள் நீதி மய்ய எழுதியுள்ள கடிதத்தில் “தேர்தல் என்பது போர்க்களம் அல்ல, வெற்றி அல்லது தோல்வி ஆகிய இரு முனைகளை மட்டுமே தேர்தலின் முடிவு என கருதிக்கொள்ள கூடாது என நான் என் சகாக்களிடம் அடிக்கடி குறிப்பிடுவேன்.
கோவை தெற்கு தொகுதியில் நடைபெற இருக்கும் தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும், அமைதியாகவும் நிகழவேண்டுமென விரும்புகிறேன்.
யார் வென்றால் தனக்கு நல்லது என மக்கள் நினைக்கிறார்களோ அவர்கள் வெல்லட்டும். நம்மில் யார் வென்றாலும் மக்கள் வென்றதாகவே பொருள். எல்லோரும் மக்கள் பணி செய்யவே வந்திருக்கிறோம். வென்றவரோடு போட்டியிட்ட அனைவரும் தோள் கொடுத்தால் அது மிகப்பெரிய ஜனநாயக பண்பாடாக அமையும் என்பதில் ஐயமில்லை.
இந்தத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நேர்மையாக நிகழ்ந்தேற நாம் அனைவரும் ஒத்துழைக்கவேண்டும். ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை நோக்கிய முன்னகர்வில் கோவை தெற்கு இந்தியாவுக்கு வழிகாட்ட வேண்டுமென விரும்புகிறேன்” என தெரிவித்திருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்