ஒருபுறம் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் மத்திய அரசு பெரிய அளவில் முழுமுடக்கத்தை அமல்படுத்த வாய்ப்பு இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
உலக வங்கி குழுமத்தின் தலைவர் டேவிட் மல்பாஸுடன் காணொலி மூலம் நிர்மலா சீதாராமன் உரையாடினார். அப்போது கொரோனா தொற்று பரவல் இரண்டாவது அலையை எதிர்க்கொள்ள அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை அமைச்சர் பகிர்ந்துகொண்டதாக நிதியமைச்சகம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. இரண்டாவது அலை ஏற்பட்டாலும் பெரிய அளவில் பொதுமுடக்கத்தை அமல்படுத்தப்போவதில்லை என்பதில் தெளிவாக இருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பொருளாதாரத்தை முழுமையாக முடக்க விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டர். பாதிக்கப்பட்ட நபர்கள், வீடுகளை தனிமைப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலமே தொற்று பரவல் கட்டுப்படுத்தப்படும் என்றும் கூறினார். இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3mLYMbJஒருபுறம் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் மத்திய அரசு பெரிய அளவில் முழுமுடக்கத்தை அமல்படுத்த வாய்ப்பு இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
உலக வங்கி குழுமத்தின் தலைவர் டேவிட் மல்பாஸுடன் காணொலி மூலம் நிர்மலா சீதாராமன் உரையாடினார். அப்போது கொரோனா தொற்று பரவல் இரண்டாவது அலையை எதிர்க்கொள்ள அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை அமைச்சர் பகிர்ந்துகொண்டதாக நிதியமைச்சகம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. இரண்டாவது அலை ஏற்பட்டாலும் பெரிய அளவில் பொதுமுடக்கத்தை அமல்படுத்தப்போவதில்லை என்பதில் தெளிவாக இருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பொருளாதாரத்தை முழுமையாக முடக்க விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டர். பாதிக்கப்பட்ட நபர்கள், வீடுகளை தனிமைப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலமே தொற்று பரவல் கட்டுப்படுத்தப்படும் என்றும் கூறினார். இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்