தமிழகத்தில் கொரோனாதொற்று வேகமாக பரவிவரும் நிலையில் சுகாதாரத்துறை செயலர் ராதகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேசிய அளவில் 2,620 நபர்களும் தமிழக அளவில் 78 நபர்களும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இறப்பு விகிதம் 2.9 சதவீதமாக உள்ளது.
தற்போதைய கொரோனா பாதிப்பு நிலவரம்:
தற்போது 95,048 பேர் கொரோனா நோய்தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 48,289 பேர் வீட்டில் தங்களை தனிமைப்படுத்தியுள்ளனர். அதன் விழுக்காடு 50.8 ஆகும். கொரோனா கவனிப்பு மையங்களில் 8,414 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன் விழுக்காடு 8.85 ஆகும்.
24,569 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் சதவீதம் 25.8 விழுக்காடு ஆகும். புதிதாக தொற்று ஏற்பட்ட 13,000 நபர்கள் இன்று சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு வருவர். கொரோனா அறிகுறிகள் இருந்தால் காய்ச்சல் முகாம்களில் சென்று சோதனை செய்துகொள்ளுங்கள்.
அங்குள்ள மருத்துவர் உங்களை சோதனை செய்து உங்களுக்கான சிகிச்சை முறையை வழங்குவார். சிக்கலான தருணங்களில் 108 அல்லது 0444- 6122300 என்று எண்களை அழையுங்கள். அதே போல 104 எண்ணையும் அழைக்கலாம். பொதுமக்கள் பதட்டமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம்.
ரெம்டெசிவிர் மருந்து அனைவருக்கும் தேவையில்லை
தேவையான மருந்துகள் கையுருப்பு உள்ளது. சிலர் ரெம்டெசிவிர் மருத்துகளை வீடுகளில் எடுத்துக்கொள்கின்றனர். அவ்வாறு செய்வதை தயவு செய்து நிறுத்துங்கள். அடுத்த 10 நாட்களுக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பொது மருத்துவம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள மருத்துவமனைகளில் கூடுதலாக 2,400 ஆக்ஸிஜன் கொள்கலன்களை கூடுதலாக வழங்க உத்தரவிட்டுள்ளார். ஒரு நிமிடத்திற்கு 150 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கலனை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகர் புறநகர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி கலன் அமைக்கப்பட உள்ளது” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்