கொரோனா விவகாரத்தில் அரசியல் உள்நோக்கமின்றி மாநில அரசுகளுக்கு உதவிட வேண்டுமென, மத்திய அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ”அதிவேகமாகப் பரவி வரும் கொரோனா 2ஆம் அலையை தமிழக அரசு கட்டுப்படுத்திட வேண்டும். இனியும் மக்கள் அலட்சியத்துடன் செயல்படக்கூடாது.அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளைப் போலவே, தனியார் மருத்துவமனைகளையும் கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கொரோனா பரவாமல் தடுப்பது, பாதிக்கப்பட்டவர்களைக் காப்பது, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது ஆகிய மூன்றையும், முக்கிய கடமைகளாகக் கொண்டு அரசுகள் செயல்பட வேண்டும்” என அறிக்கையில் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்