தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
தமிழக சட்டமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள், வரும் மே 2-ம் தேதி எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பணப்பட்டுவாடா தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி அடங்கிய குழுவை நியமித்து விசாரணை நடத்தக் கோரியும், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க கோரியும் அளித்த புகாரை பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று வந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை மே 2-ம் தேதி எண்ணுவதற்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. மேலும் பணப்பட்டுவாடா தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக் கோரியதும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/332aqX2தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
தமிழக சட்டமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள், வரும் மே 2-ம் தேதி எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பணப்பட்டுவாடா தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி அடங்கிய குழுவை நியமித்து விசாரணை நடத்தக் கோரியும், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க கோரியும் அளித்த புகாரை பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று வந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை மே 2-ம் தேதி எண்ணுவதற்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. மேலும் பணப்பட்டுவாடா தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக் கோரியதும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்