கடந்த 8 மாதத்திற்கு முன்பு இறந்த காவல்துறை அதிகாரிக்கு கடந்த 18ம் தேதி கொரோனா பரிசோதனை செய்ததாக சுகாதாரத்துறை அளித்த சான்றிதழ் சமூக வலைத்தளத்தில் வைரலானதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட சுரண்டை சேர்ந்த முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் அந்தோணிராஜ் மகன் வினேத். இவர் தனது மனைவி ஜென்சியுடன் சென்னையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவரது செல்போன் நம்பருக்கு கடந்த 14ஆம் தேதி அவரது மனைவி ஜென்சிக்கு கோவிட் பரிசோதனை செய்துள்ளதாக குறுந்தகவல் வந்துள்ளது. அவர் அதை பொருட்படுத்தவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தென்காசி கொரோனா கட்டுப்பாட்டு அறையிலிருந்து அவருக்கு போன் செய்த அதிகாரிகள் கடந்த 18ஆம் தேதி உங்கள் தந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு நெகட்டிவ் என வந்துள்ளது. உங்களது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் எனது தந்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இறந்துவிட்டார் என்றும் கடந்த ஆறு மாதமாக சென்னையில் இருந்து எனது மனைவி ஊருக்கு வரவில்லை என்றும் நாங்கள் கொரோனா பரிசோதனை செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ''நமது நாட்டில் சுடுகாட்டில் ஊழல் செய்தார்கள்.எதிர்க்கட்சி தலைவர்கள் கூறியதுபோல் தற்போது கொரோனா நோய் தொற்றிலும் ஊழலில் ஈடுபட்டு வருகிறார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. மருந்தே இல்லாத இந்த நோய் தொற்றுக்கு லட்சக்கணக்கில் தனியார் மருத்துவமனைகள் வசூல் செய்து கொள்ள அரசு அனுமதி அளித்ததால் அப்போது பெரிய அளவில் சர்ச்சை ஏற்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் குறைந்தது ஐந்து லட்சம் முதல் இந்த நோய் தொற்றுக்கு கட்டணம் வசூலித்தனர்.
கடந்த ஆண்டில் தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு முறையாக உணவு வழங்கவில்லை என அவ்வப்போது புகார் வந்தது. குறிப்பாக தக்காளி சாதம்,தயிர் சாதம் போன்ற சாதங்களை மட்டுமே வழங்குவதாகவும் அவர்களை சரியாக கவனிக்கவில்லை என்றும் அங்கிருந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு நிகழ்வும் நடந்துள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட உணவிலும் எண்ணிக்கையிலும் பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கலாம் என இந்த நிகழ்வு சந்தேகப்பட வைக்கிறது. எது எப்படியோ கொரோனா பரிசோதனை செய்யாதவருக்கும், ஏற்கனவே இறந்தவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. இது ஊழியர் ஒருவரின் கவனமின்மை காரணமாக நடந்ததா அல்லது இதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதா என்பதை பொதுமக்களுக்கு அரசு தெளிவாக விளக்க வேண்டும் எனக்கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/32F9qrzகடந்த 8 மாதத்திற்கு முன்பு இறந்த காவல்துறை அதிகாரிக்கு கடந்த 18ம் தேதி கொரோனா பரிசோதனை செய்ததாக சுகாதாரத்துறை அளித்த சான்றிதழ் சமூக வலைத்தளத்தில் வைரலானதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்