Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ஹைதராபாத்தை ஊதித்தள்ளிய சென்னை! 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது!

https://ift.tt/3nvssKH

ஹைதராபாத்தை ஊதித்தள்ளிய சென்னை! 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது!

நடப்பு ஐபிஎல் சீசனில் ஐந்தாவது தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது தோனி தலைமையிலான சென்னை அணி. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற 23வது லீக் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்று வெற்றி நடை போட்டுள்ளது. முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 171 ரன்களை எடுத்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது சென்னை. 

ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஃபாப் டூப்ளசிஸ் சென்னை சார்பில் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் 129 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அவர்கள் அடித்த பவுண்டரிகள் அவர்களது ஆட்டத்திறனை பறைசாற்றியது. இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்து அசத்தினர். 

இருவரது கூட்டணியையும் தகர்க்க ஹைதராபாத் அணியின் பவுலர்கள் படாத பாடுபட்டனர். ஒருவழியாக ரஷீத் கான் வீசிய 13வது ஓவரில் ருதுராஜ் கிளீன் போல்ட் ஆனார். தொடர்ந்து களத்திற்கு வந்த மொயின் அலி 8 பந்துகளில் 15 ரன்களை குவித்து ரஷீத் வீசிய 15வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். அதே ஓவரில் டூப்ளசிஸ் தனது விக்கெட்டை LBW முறையில் இழந்தார்.

பின்னர் ரெய்னாவும், ஜடேஜாவும் களத்திற்கு வந்தனர். இறுதியில் சென்னை அணி பந்துகள் 9 எஞ்சிய நிலையில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. முதல் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக தோல்வி அடைந்த சென்னை அணி அடுத்தடுத்து 5 போட்டிகளில் வெற்றி பெற்று வீறுநடை போடுகிறது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்