மேற்குவங்க சட்டப்பேரவைக்கான 7-ம் கட்ட தேர்தல் இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. இதில், மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
மேற்கு வங்கம் மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை ஆறு கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், 34 தொகுதிகளுக்கான ஏழாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடக்கும் இந்த தேர்தலில் 284 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஏழாம் கட்ட தோ்தலில், திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானர்ஜி இப்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் பவானிபூா் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மம்தா பானா்ஜி இந்த முறை நந்திகிராமில் பாஜக வேட்பாளா் சுவேந்து அதிகாரியை எதிர்த்துப் போட்டியிட்டுள்ளார்.
கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற 4-ஆம் கட்ட தேர்தலின்போது நேரிட்ட வன்முறையில் 5 போ் உயிரிழந்தனர். இதுபோன்ற அசம்பாவிதங்கள் இனி நிகழாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சம்சீா்கஞ்ச், ஜாங்கீா்பூர் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்கள் உயிரிழந்ததால் அங்கு தோ்தல் நடத்தப்படவில்லை. இந்த தொகுதிகளுக்கு மே 16-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்