Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

கட்டுப்பாடுகளுக்கு இடையே தினசரி 4 காட்சிகள்: தியேட்டர்களின் புதிய அட்டவணை

தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகளில் திரையிடப்படும் காட்சிகளின் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், திரையரங்குகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அது குறித்து நேற்று திரையரங்க உரிமையாளர்கள் காணொலி வாயிலாக ஆலோசனை செய்தனர். அதில், அரசின் விதிமுறைகளை பின்பற்றி காட்சிகளை திரையிடுவது என்று முடிவெடுத்தனர்.

image

அதன்படி இரவு 10 மணிக்குள் அனைத்து காட்சிகளையும் முடித்து திரையரங்குகளை மூடுவது என திட்டமிடப்பட்டது. இதனால் இரவு காட்சி ரத்து செய்யப்பட்டது. அதேநேரத்தில், காலைக் காட்சியை 9.45-க்கு தனி திரையரங்குகளில் திரையிட தொடங்குவது என முடிவெடுத்து அறிவித்துள்ளனர். அதேபோல் மால்களில் உள்ள திரையரங்குகளில் காலை 9 மணிக்கு காலை காட்சி திரையிடப்படும் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் தினமும் நான்கு காட்சிகளை திரையிட திட்டமிட்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/32BVEWo

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்