நாடு முழுவதும் நடத்தப்பட்ட தடுப்பூசி திருவிழாவின் நான்காவது நாளான நேற்று சுமார் 31.39 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இதுவரை தலா ஒரு கோடி டோஸுக்கு மேல் தடுப்பூசி செலுத்தி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தடுப்பூசி போடுவதற்காக 69,974 மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. நேற்று இரவு 8 மணி வரை நாட்டில் 11 கோடியே 43 லட்சத்து 18 ஆயிரத்து 455 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா நேற்று தொடங்கிய நிலையில் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்