தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் காவல்துறையினர் உள்ளிட்ட 1,58,263 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறையினர் மற்றும் ஆயுதப்படை போலீசார் 74,162 பேரும், துணை ராணுவத்தினர் 23,200 பேரும், தமிழக சிறப்பு காவல்படையினர் 8,010 பேர் என 1,05,372 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஊர்க்காவல்படை, தீயணைப்புத் துறை, சிறை வார்டன்கள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் என 34, 130 பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக அதிகாரிகள் தவிர, வெளிமாநில காவல்துறையினர் 1,350 பேரும், வெளிமாநிலங்களின் ஊர்க்காவல் படையினர் 12,411 பேரும் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/39Jzzt7தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் காவல்துறையினர் உள்ளிட்ட 1,58,263 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறையினர் மற்றும் ஆயுதப்படை போலீசார் 74,162 பேரும், துணை ராணுவத்தினர் 23,200 பேரும், தமிழக சிறப்பு காவல்படையினர் 8,010 பேர் என 1,05,372 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஊர்க்காவல்படை, தீயணைப்புத் துறை, சிறை வார்டன்கள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் என 34, 130 பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக அதிகாரிகள் தவிர, வெளிமாநில காவல்துறையினர் 1,350 பேரும், வெளிமாநிலங்களின் ஊர்க்காவல் படையினர் 12,411 பேரும் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்